You cannot copy content of this page

015 போசன விதி

போசன விதி

எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு கட்ட அடிசில் அமுதென்று எதிர்கொள்வர் ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம் விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே.  1

அச்சிவன் உள்நின்ற அருளை அறிந்தவர் உச்சியம் போதாக உள்ளமர் கோவிற்குப் பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து இச்சைவிட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே.  2

Scroll to Top