You cannot copy content of this page

003 ஞாதுரு ஞான ஞேயம்

ஞாதுரு ஞான ஞேயம்

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப் பாங்கான பாசம் படரா படரினும் ஆங்கார நீங்கி யதநிலை நிற்கவே நீங்கா அமுத நிலைபெற லாமே.  1

ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும் ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும் ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர் ஆயத்தில் நின்ற அறிவறி வாரே.  2

தானென் றவனென் றிரண்டாகும் தத்துவந் தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டு தானென்ற பூவை யவனடி சாத்தினால் நானென் றவனென்கை நல்லதொன் றன்றே.  3

வைச்சன வாறாறு மாற்றியெனவைத்து மெச்சப் பரன்றன் வியாத்துவ மேலிட்டு நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால் அச்சங் கெடுத்தென்னை யாண்டனன் நந்தியே.  4

முன்னை யறிவறியாதஅம் மூடர்போற் பின்னை யறிவுஅறி யாமையைப் பேதித்தான் தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத் தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே.  5

காணாத கண்ணுடன் கேளாத கேள்வியுங் கோணாத போகமுங் கூடாத கூட்டமும் நாணாத நாணமும் நாதாந்த போதமுங் காணா யெனவந்து காட்டினன் நந்தியே.  6

மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும் மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும் மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண் மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே.  7

முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால் வைத்த கலைகால் நான்மடங் கால்மாற்றி உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே.  8

மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி பாலித்த முத்திரை பற்றும் பரஞானி ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.  9

Scroll to Top