You cannot copy content of this page

011 ஞான வேடம்

ஞான வேடம்

ஞானமி லார்வேடம் பூண்டும் நரகத்தர் ஞானமுள்ளார்வேடம்இன்றெனில்நன்முத்தர் ஞானமுளதாக வேண்டுவோர் நக்கன்பால் ஞானமுள வேட நண்ணிநிற் பாரே.  1

புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை நன்ஞானத்தோர்வேடம் பூணார் அருள்நண்ணித் துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர் பின்ஞானத் தோரொன்றும் பேசுகில்லாரே.  2

சிவஞானி கட்குஞ் சிவயோகி கட்கும் அவமான சாதனம் ஆகாது தேரில் நவமா மவர்க்கது சாதன நான்கும் உவமான மில்பொருள் உள்ளுற லாமே.  3

சுத்தித் திரிவர் கழுவடி நாய்போற் கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள் ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே.  4

அடியா ரவரே யடியா ரலாதார் அடியாரு மாகார்அவ் வேடமு மாகா அடியார் சிவஞான மானது பெற்றோர் அடியா ரலாதார் அடியார்கள் அன்றே.  5

ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாந் தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமே ஆனவவ் வேடம் அருண்ஞான சாதனம் ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே.  6

ஞானத்தி னாற்பத நண்ணுஞ் சிவஞானி தானத்தில் வைத்த தனியால யத்தனாம் மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம் ஏனைத் தவசி இவனென லாகுமே.  7

தானற்ற தன்மையுந் தானவ னாதலும் ஏனைய வச்சிவ மான இயற்கையுந் தானுறு சாதக முத்திரை சாத்தலு மேனவும் நந்தி பதமுத்தி பெற்றதே.  8

Scroll to Top