You cannot copy content of this page

017 முத்திர பேதம்

முத்திர பேதம்

நாலேழு மாறவே நண்ணிய முத்திரை பாலான மோன மொழியில் பதிவித்து மேலான நந்தி திருவடி மீதுய்யக் கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே.  1

துரியங்கள் மூன்றுஞ் சொருகிட னாகி அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி மருவிய சாம்பவி கேசரி உண்மை பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே.  2

சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம் ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரை ஓம்பயில் ஒங்கிய உண்மைய கேசரி நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரையே.  3

தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும் ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால் ஏனைச் சிவமாம் சொரூபம் மறைந்திட்ட மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.  4

வாக்கு மனமும் இரண்டும் மவுனமாம் வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம் வாக்கு மனமும் மவுனமாம் சுத்தரே ஆக்கும் அச் சுத்தத்தை யார்அறி வார்களே.  5

யோகத்தின் முத்திரை ஓர்அட்ட சித்தியாம் ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால் ஆகத் தகும்வேத கேசரி சாம்பவி யோகத்துக் கேசரி யோகமுத் திரையே.  6

யோகிஎண் சித்தி அருளொலி வாதனை போகி தண் புத்தி புருடார்த்த நன்னெறி ஆகும்நன் சத்தியும் ஆதார சோதனை ஏகமும் கண்டொன்றில் எய்தநின் றானே.  7

துவாதச மார்க்கமென் சோடச மார்க்கமாம் அவாஅறும் ஈர்ஐ வகைஅங்கம் ஆறும் தவாஅறு வேதாந்த சித்தாந்தத் தன்மை நவாஅக மோடுஉன்னல் நற்சுத்த சைவமே.  8

மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை தேனிக்கும் முத்திரை சித்தாந்த முத்திரை கானிக்கும் முத்திரை கண்ட சமயமே.  9

தூநெறி கண்ட சுவடு நடுவுஎழும் பூநெறி கண்டுஅது பொன்னக மாய்நிற்கும் மேல்நெறி கண்டது வெண்மதி மேதினி நீநெறி கண்டுள நின்மலன் ஆமே.  10

Scroll to Top