You cannot copy content of this page

009 தவவேடம்

தவவேடம்

தவமிக் கவரே தலையான வேடர் அவமிக் கவரே யதிகொலை வேடர் அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந் தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே.  1

பூதி யணிவது சாதன மாதியிற் காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந் தீதில் சிவயோகி சாதனந் தேரிலே.  2

யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன் றாகத்து நீறணி யங்கக் கபாலஞ் சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.  3

காதணி குண்டலங் கண்டிகை நாதமும் ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம் ஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே.  4

Scroll to Top