You cannot copy content of this page

022 ஆதி நிலை

ஆதி நிலை

செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள் மஞ்சுடை மேரு வலம்வரு காரணம் எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி தஞ்சுட ராக வணங்கும் தவமே.  1

பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம் புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன் இகலற ஏழுல கும்உற வோங்கும் பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே.  2

ஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும் சோதியின் உள்ளே சுடரொளி யாய்நிற்கும் வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும் ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.  3

தானே உலகுக்குத் தத்துவனாய் நிற்கும் தானே உலகுக்குத் தையலு மாய்நிற்கும் தானே உலகுக்குச் சம்புவு மாய்நிற்கும் தானே உலகுக்குத் தண்சுட ராகுமே.  4

வலையமுக் கோணம் வட்டம் அறுகோணம் துலையிரு வட்டம் துய்ய விதழ்எட்டில் அலையுற்ற வட்டத்தில் ஈர்எட்டு இதழாம் மலைவற்று உதித்தனன் ஆதித்தன் ஆமே.  5

ஆதித்தன் உள்ளி லானமுக் கோணத்தில் சோதித்து இலங்கும்நற் சூரியன் நாலாம் கேத முறுங்கேணி சூரியன் எட்டில் சோதிதன் நீட்டில் சோடசம் தானே.  6

ஆதித்த னோடே அவனி இருண்டது பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற வேதப் பொருளை விளங்குகி லீரே.  7

பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள் நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன் ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.  8

மண்ணை இடந்துஅதின் கீழொடும் ஆதித்தன் விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும் கண்ணை இடந்து களிதந்த ஆனந்தம் எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே.  9

பாரை இடந்து பகலோன் வரும்வழி யாரும் அறியார் அருங்கடை நூலவர் தீரன் இருந்த திருமலை சூழ்என்பர் ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே.  10

Scroll to Top