You cannot copy content of this page

007 அதிசூக்கும பஞ்சாக்கம்

அதிசூக்கும பஞ்சாக்கம்

சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி அவாயம் அறவே அடிமைய தாக்கிச் சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே.  1

செஞ்சுடர் மண்டலத்து ஊடுசென்று அப்புறம் அஞ்சண வும்முறை ஏறிவழிக் கொண்டு துஞ்சும் அவன்சொன்ன காலத்து இறைவனை நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே.  2

அங்கமும் ஆகம வேதமது ஓதினும் எங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பது சங்கைகெட்டு அவ்எழுத்து ஒன்றையும் சாதித்தால் அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே.  3

பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை எழுத்துஅறி வோம்என்று உரைப்பர்கள் ஏதர் எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே.  4   

Scroll to Top