You cannot copy content of this page

032 ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை

ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை

ஆக மதத்தன ஐந்து களிறுள ஆக மதத்தறி யோடுஅணை கின்றில பாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின் யோகு திருந்துதல் ஒன்று அறி யோமே.  1

கருத்தின்நன் னூல்கற்று கால்கொத்திப் பாகன் திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே வருத்தினும் அம்மா வழிநட வாதே.  2

புலம் ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும் நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன் உலம்வந்து போம்வழி ஒன்பது தானே.  3

அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சுக மேபுகும் அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால் எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே.  4

ஐவர் அமைச்சருள் தொண்ணூற்று அறுவர்கள் ஐவரும் மைந்தரும் ஆளக் கருதுவர் ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றிடில் ஐவர்க் கிறைஇறுத்து ஆற்றகி லோமே.  5

சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும் சொல்லகில் லேன்திரு மங்கையும் அங்குள வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும் கொல்லநின் றோடும் குதிரைஒத் தேனே.  6

எண்ணிலி இல்லி அடைத்துஅவ் இருட்டறை எண்ணிலி இல்லியோடு ஏகில் பிழைதரும் எண்ணிலி இல்லியோடு ஏகாமை காக்குமேல் எண்ணிலி இல்லதோர் இன்பமது ஆமே.  7

விதியின் பெருவலி வேலைசூழ் வையம் துதியின் பெருவலி தொல்வான் உலகம் மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை நிதியின் பெருவலி நீர்வலி தானே.  8

Scroll to Top