You cannot copy content of this page

029 சீவன்

சீவன்

மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறுநூ றாயிரத்து ஒன்றே.  1

ஏனோர் பெருமையன் ஆயினும் எம்மிறை ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தின் அளவே.  2

உண்டு தெளிவன் உரைக்க வியோகமே கொண்டு பயிலும் குணமில்லை யாயினும் பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக் கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே.  3

மாயா உபாதி வசத்தாகும் சேதனத்து ஆய குருஅரு ளாலே அதில்தூண்ட ஓயும் உபாதியோடு ஒன்றின் ஒன் றாது உயிர் ஆய துரியம் புகுந்தறி வாகவே.  4

Scroll to Top