You cannot copy content of this page

024 மன ஆதித்தன்

மன ஆதித்தன்

எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும் எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப விரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவி ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே.  1

சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை அந்த இரண்டும் உபய நிலத்தில் சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே.  2

ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதி ஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர் ஆகும் அருக்கன் அனல்மதி யோடுஒன்ற ஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே.  3

ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி ஓர் அண்டத் தார்க்கும் உணரா உணர்வது பேர்அண்டத்து ஊடே பிறங்கொளி யாய்நின்றது ஆர் அண்டத் தக்கார் அறியத்தக் காரே.  4

ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும் ஒன்பதும் ஈசன் இயல்அறி வார்இல்லை முன்புஅதின் மேவி முதல்வன் அருளிலார் இன்பம் இலார்இருள் சூழநின் றாரே.  5

Scroll to Top