You cannot copy content of this page

025 முக்கரணம்

முக்கரணம்

இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன் கடன் உறும் அவ்வுரு வேறெனக்காணும் திடமது போலச் சிவபர சீவர் உடனுரை பேதமும் ஒன்றென லாமே.  1

ஒளியைஒளிசெய்து ஓம்என்று எழுப்பி வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத் தெளியத் தெளியும் சிவபதம் தானே.  2

முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅக் கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்தி மிக்க மனோன்மணி வேறே தனித்துஏக ஒக்குமது உன்மனி ஓதுஉள் சமாதியே.  3

Scroll to Top