You cannot copy content of this page

019 முப்பதம்

முப்பதம்

தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர ஏன்ற அசிபதம் இம்மூன்றோடு எய்தினோன் ஆன்ற பராபர மாகும் பிறப்பற ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே.  1

போதந் தனையுன்னிப் பூதாதி பேதமும் ஓதுங் கருவிதொண் ணூறுடன் ஓராறு பேதமும் நாதாந்தப் பெற்றியில் கைவிட்டு வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே.  2

தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும் நிற்பது அசியத்துள் நேரிழை யாள்பதம் சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன் கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.  3

அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்து கணுஒன் றிலாத சிவமும் கலந்தால் இணையறு பால்தேன் அமுதென இன்பத் துணையது வாயுரை யற்றிடத் தோன்றுமே.  4

தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம் நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும் அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.  5

ஐம்பது அறியா தவரும் அவர்சிலர் உம்பனை நாடி உரைமுப்ப தத்திடைச் செம்பர மாகிய வாசி செலுத்திடத் தம்பரயோகமாய்த் தான்அவன் ஆகுமே.  6

நந்தி அறிவும் நழுவில் அதீதமாம் இந்தியம் சத்தாதி விடவிய னாகும் நந்திய மூன்றுஇரண்டு ஒன்று நலம்ஐந்து நந்தி நனவாதி மூட்டும் அனாதியே.  7

பரதுரி யத்து நனவு படியுண்ட விரிவிற் கனவும் இதன்உப சாந்தத்து துரிய சுழுமுனையும் ஓவும் சிவன்பால் அரிய துரியம் அசிபதம் ஆமே.  8

Scroll to Top