You cannot copy content of this page

020 முப்பரம்

முப்பரம்

தோன்றிஎன் உள்ளே சுழன்றுஎழு கின்றதோர் மூன்று படிமண் டலத்து முதல்வனை ஏன்றெய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி நான்று நலம்செய் நலந்தரு மாறே.  1

மன்று நிறைந்தது மாபர மாயது நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும் கன்று நினைந்தெழு தாயென வந்தபின் குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே.  2

ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப்பரம் கூறா உபதேசம் கூறில் சிவபரம் வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார் பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.  3

பற்றறப் பற்றில் பரம்பதி யாவது பற்றறப் பற்றில் பரனறி வேபரம் பற்றறப் பற்றினில் பற்றவல் லோர்கட்கே பற்றறப் பற்றில் பரம்பர மாமே.  4

பரம்பர மான பதிபாசம் பற்றாப் பரம்பர மாகும் பரஞ்சிவ மேவப் பரம்பர மான பரசிவா னந்தம் பரம்பர மாகப் படைப்பது அறிவே.  5

நனவில் கலாதியாம் நாலொன்று அகன்று தனியுற்ற கேவலம் தன்னில் தானாகி நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயந் தனையுற்று இடத்தானே தற்பர மாமே.  6

தற்கண்ட தூயமும் தன்னில் விலாசமும் பிற்காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத் தற்பரன் கால பரமும் கலந்தற்ற நற்பரா தீதமும் நாடுஅக ராதியே.  7

Scroll to Top