You cannot copy content of this page

034 முத்திநிந்தை

முத்திநிந்தை

பரகதி யுண்டென இல்லையென் போர்கள் நரகதி செல்வது ஞாலம் அறியும் இரகதி செய்திடு வார்கடை தோறும் துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே.  1

கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள் பாடகில் லாரவன் செய்த பரிசறிந் தாடவல் லாரவர் பேறெது வாமே.  2

புறப்பட்டுப் போகும் புகுதுமென் னெஞ்சில் திறப்பட்ட சிந்தையைப் தெய்வமென் றெண்ணி அறப்பட்ட மற்றப் பதியென் றழைத்தேன் இறப்பற்றி னேன்இங் கிதென்னென்கின் றானே  3

திடரிடை நில்லாத நீர்போல் ஆங்கே உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக் கடலிடை நில்லாக் கலஞ்சேரு மாபோல் அடலெரி வண்ணனும் அங்குநின் றானே.  4

தாமரை நூல்போல் தடுப்பார் பரத்தொடும் போம்வழி வேண்டிப் புறமே யுழிதர்வர் காண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள் தீநெறி செல்வான் திரிகின்ற வாறே.  5

மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள் கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன் காடும் மலையுங் கழனி கடந்தோறும் ஊடும் உருவினை யுன்னகி லாரே.  6

ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள் போவார் குடக்கும் குணக்கும் குறிவழி நாவினின் மந்திர மென்று நடுவங்கி வேவது செய்து விளங்கிடு வீரே.  7

மயக்குற நோக்கினும் மாதவஞ் செய்யார் தமக்குறப் பேசின தாரணை கொள்ளார் சினக்குறப் பேசின தீவினை யாளர் தமக்குற வல்வினை தாங்கிநின் றாரே.  8

Scroll to Top