You cannot copy content of this page

032 ஒன்பான் அபிமானி

ஒன்பான் அபிமானி

தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன் நற்பத விராட்டன்பொன் கெற்பனவ் யாகிர்தன் பிற்பதஞ் சொலிதையன் பிரசா பத்தியன் பொற்புவி சாந்தன் பொருதபி மானியே.  1

நவமாம் அவத்தை நனவாதி பற்றிற் பவமா மலங்குணம் பற்றற்றுப் பற்றாத் தவமான சத்திய ஞானப் பொதுவிற் றுவமார் துரியஞ் சொருபம தாமே.  2

சிவமான சிந்தையிற் சீவன் சிதைய பவமான மும்மலம் பாறிப் பறிய நவமான அந்தத்தின் நற்சிவ போதந் தவமான மவையாகித் தானல்ல வாகுமே.  3

முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவந் தன்சொல்லில் எண்ணத்தகாவொன்பான் வேறுள பின்சொல்ல லாகுமிவ் வீரொன்பான் பேர்த்திட்டுத் தன்செய்த வாண்டவன் றான்சிறந் தானே.  4

உகந்த ஒன்பதும் ஐந்தும் உலகம் பகர்ந்த பிரானென்னும் பண்பினை நாடி அகந்தெம் பிரானென்பன் அல்லும் பகலும் இகந்தன வல்வினை யோடறுத் தானே.  5

நலம்பல காலந் தொகுத்தன நீளங் குலம்பல வண்ணங் குறிப்பொடுங் கூடும் பலம்பல பன்னிரு கால நினையும் நிலம்பல வாறினன் நீர்மையன் றானே.  6

ஆதி பராபர மாகும் பராபரை சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம் ஓதுங் கமைமாயே யோரிரண் டோர்முத்தி நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே.  7

தேராத சிந்தை தெளியத் தெளிவித்து வேறாத நரக சுவர்க்கமும் மேதினி ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான் வேறாத் தெளியார் வினையுயிர் பெற்றதே.  8

ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி நன்பாற் பயிலு நவதத் துவமாதி ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச் செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே.  9

Scroll to Top