You cannot copy content of this page

003 பிரணவ சமாதி

பிரணவ சமாதி

தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை பாலித்த சூக்கும மேலைப் சொரூபப்பெண் ஆலித்த முத்திரை ஆங்கதிற்காரணம் மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.  1

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.  2

ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள் ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம் ஓங்கார தீதத்து உயிர்மூன்றும் உற்றன ஓங்கார சீவ பரசிவ ரூபமே.  3

வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும் அருக்கம் சராசரம் ஆகும் உலகில் தருக்கிய ஆதாரம் எல்லாம்தன் மேனி சுருக்கம்இல் ஞானம் தொகுத் துணர்ந் தோரே.  4

மலையும் மனோபவம் மருள்வன ஆவன நிலையில் தரிசனம் தீப நெறியாம் தலமும் குலமும் தவம்சித்த மாகும் நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே.  5

சோடச மார்க்கமும் சொல்லும்சன்மார்க்கிகட்கு ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற் கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்து ஏறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே.  6

Scroll to Top