You cannot copy content of this page

026 சிவாதித்தன்

சிவாதித்தன்

அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும் சென்றிடு ஞானச் சிவப்பர காசத்தால் ஒன்றும் இருசுட ராம்அரு ணோதயம் துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.  1

கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில் அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து அடங்கிட நின்றதும் அப்பரி சாமே.  2

தானே விரிசுடர் மூன்றும்ஒன்றாய் நிற்கும் தானே அயன்மால் எனநின்று தாபிக்கும் தானே உடலுயிர் வேறன்றி நின்றுளன் தானே வெளியொளி தானிருட் டாமே.  3

தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும் வையம் புனல்அனல் மாருதம் வானகம் சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர் ஐவர்க்கு இடம்இடை ஆறங்கம் ஆமே.  4

Scroll to Top