You cannot copy content of this page

014 சிவ தரிசனம்

சிவ தரிசனம்

சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும் சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச் சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே.  1

வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள் நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை ஆக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.  2

பரனாய்ப் பராபர னாகிஅப் பால்சென்று உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய் தரனாய்த் தனாதென வாறுஅறி வொண்ணா அரனாய் உலகில் அருள்புரிந் தானே.  3   

Scroll to Top