You cannot copy content of this page

006 சூக்கும பஞ்சாகாரம்

சூக்கும பஞ்சாகாரம்

எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த் தெளிய ஒதிச்சிவாயநம என்னும் குளிகை யிட்டுப் பொன் னாக்குவன் கூட்டையே.  1

சிவன்சத்தி சீவன் செறுமல மாயை அவஞ்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச் சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர அவம்சேர்த்த பாசம் அணுககி லாவே.  2

சிவன்அரு ளாய சிவன்திரு நாமம் சிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயை சிவன்முத லாகச் சிறந்து நிரோதம் பவமது அகன்று பரசிவன் ஆமே.  3

ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ் ஆதி தனைவிட்டு இறையருள் சத்தியால் தீதில் சிவஞான யோகமே சித்திக்கும் ஓதும் சிவாய மலமற்ற உண்மையே.  4

நமாதி நனாதி திரோதாயி யாகித் தம்ஆதிய தாய்நிற்கத் தான்அந்தத் துற்றுச் சமாதித் துரியம் தமதுஆகம் ஆகவே நமாதி சமாதி சிவமாதல்1 எண்ணவே பா-ம் : 1சிவவாதல்  5

அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில் ஒருவனை ஈன்றவர்1 உள்ளுறும் மாயை திரிமலம் நீங்கிச் சிவாயஎன்று ஓதும் அருவினை தீர்ப்பதும் அவ்வெழுத் தாமே. பா-ம் : 1ஈன்றவள்  6

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர் சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்கச் சிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள் சிவசிவ ஆகும் திருவருள் ஆமே.  7

சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்னச் சிவகதி தானே.  8

நவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச் சிவவென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப் பவமது தீரும் பரிசும்அது அற்றால் அவதி தீரும் அறும்பிறப்பு அன்றோ.  9   

Scroll to Top