You cannot copy content of this page

திருமூல நாயனார் துதி

திருமூல நாயனார் துதி

ஐய மாக்கடல் ஆழ்ந்த உயிர்க்கெலாம்
கையில் ஆமல கம்மெனக் காட்டுவான்
மையல் தீர்திரு மந்திரஞ் செப்பிய
செய்ய பொற்றிரு மூலனைச் சிந்திப்பாம்.

  • பதிபசுபாச விளக்கம்

திருமூல தேவனையே சிந்தைசெய் வார்க்குக் 
கருமூலம் இல்லையே காண்.


  • தனிப் பாடல்

திருமூலன்

கண்ணுக்கு இனியோன் காதலன் காதலுறு
பண்ணுக்கு உரியோன் பராபரன் பரமனுறை
விண்ணுக்கு வேதியன் வித்தகன் வேமிய
புண்ணுக்கு மருந்தோன் பூரணன் புண்ணியனே!

உத்தமன் நம்மை உய்விக்கும் நாதன்
நித்தமும் நம்மை நேசிக்கும் நேசன்
சித்தமும் சீவனும் உமையொரு பாகன்
பித்தனும் பிறையோன் பக்தனும் ஆமே!

அய்யம் தீர்த்த அய்யன் திருமூலன்
கைய்யில் ஏந்திக் காக்கும் திருமுலன்
மைய்யல் தீர்த்த மாதவன் திருமூலன்
செய்யும் செயலின் சேயோன் திருமூலன்!

திருமந்திரம்

சிந்தை தெளிவுற சீர்மிகு மந்திரம்
நிந்தை நிலையற நேரிசை மந்திரம்
எந்தை ஈசனின் இணைகழல் மந்திரம்
தந்தை மூலனின் தவபோத மந்திரம்!

பாசம் பதிபசு பயில்தரு மந்திரம்
நேசம் நெறிதரும் நிறையருள் மந்திரம்
தேசம் தெளிவுற தென்தமிழ் மந்திரம்
ஈசன் இறையருள் இன்னுயிர் மந்திரம்

மூலன் முறைசெய்த முத்தமிழ் மந்திரம்
காலன் கனிவுறக் காத்திடும் மந்திரம்
மாலன் மகிழ்வுறும் மாதவ மந்திரம்
பாலன் மடிசேர் பார்மிகு மந்திரம்!

ஆக்கியோன்:

சர்க்கரையப்ப வேலாயுத முத்துக்குமாரசாமி

Scroll to Top