You cannot copy content of this page

002 உடல்விடல்

உடல்விடல்

பண்ணாகும் காமம் பயிலும் வசனமும் விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும் புண்ணாம் உடலில் பொருந்தும் மனத்தையும் அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே. 1

அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவிகண் கழிகின்ற காலவ் விரதங்கள் தானம் மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே.  2

இலையாம் இடையில் எழுகின்ற காமம் முலைவாய நெஞ்சத்து மூழ்கும் உளத்துத் தலையாய மின்னுடல் தாங்கித் திரியும் சிலையாய சித்தம் சிவமுன் இடைக்கே.  3

Scroll to Top