You cannot copy content of this page

சிவபெருமானை வழிபடுங்கள்…!!

சிவனை வணங்கும் முறை :

🔥 சிவாலயங்களில் இறைவனை வணங்கும் பொழுது பலிபீடத்திற்கு அருகில் நின்றுதான் வணங்க வேண்டும்.

🔥 சன்னிதி கிழக்கு நோக்கி இருந்தால் பலிபீடத்திற்கு தென்கிழக்கு மூலையில் நின்று வணங்க வேண்டும்.

🔥 தெற்கு மற்றும் மேற்கு நோக்கிய சன்னிதி இருந்தால் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் நின்று வணங்க வேண்டும்.

🔥 சன்னிதி வடக்கு நோக்கி இருந்தால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் நின்று வணங்க வேண்டும்.

🔥 சிவாலயங்களில் கொடிமரத்திற்கு அருகில் நின்று மூன்று முறை வணங்க வேண்டும். அதுபோல் மூன்று முறை வலம் வர வேண்டும். வலம் வரும்பொழுது கொடி மரத்தையும் சேர்த்து வலம் வர வேண்டும். ஆலயத்திற்குள் இருக்கும் மற்ற சன்னதிகளில் விழுந்து வணங்கக்கூடாது.

🔥 ஆலயத்தில் அபிஷேகம் நடைபெறும் சமயத்தில் எந்த வேண்டுதல்களையும் செய்யக்கூடாது. ஆலயத்திற்குள் இறைவனை அன்றி பிறரை வணங்கக்கூடாது.

🔥 அபிஷேகம் நடைபெறும் சமயத்தில் அபிஷேகத்தை காண்பதை தவிர வேறு எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. வெளியேறும் பொழுது கொடிமரம் அருகில் ஒருமுறை வணங்கிவிட்டு பின்பு செல்ல வேண்டும்.

சிவனுக்கு உரிய மலர்கள் :

🔥 சிவனுக்கு உரிய மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் செல்வவளம் மிகுதியாகும்.

🔥 ஈசன் விரும்பும் எருக்கம் பூ, அருகம்புல், திருநீறு, ஊமத்தை போன்றவற்றை அளிப்பதால் குபேர யோகம் கிடைக்கப்பெறும்.

🔥 பல்வேறு புஷ்பங்கள் மற்றும் நீர்கொண்டு ஈசனை வழிபடுவதால் மன அமைதி கிடைக்கும். மன இறுக்கம் தளர்ந்து விடும்.

🔥 சதபத்ரம், தாமரை, வில்வம் இவற்றால் அர்ச்சனை செய்பவர்களுக்கு பெரும் செல்வம் கிட்டும்.

🔥 ஜாதி மலர், அரளி, அத்தி, முல்லை, நீலோத்பவம் இவைகளால் அர்ச்சனை செய்பவர்களுக்கு சகல வளங்களும் நிறைந்து காணப்படும்.

🔥 ஒரே ஒரு கொன்றை மலரை ஈசனுக்கு சாற்றுபவர்களுக்கு பெறுதற்கு அரிய பாக்கியங்கள் கிட்டும்.

🔥 சகல தோஷங்களும் நீங்க வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். வில்வ அர்ச்சனை செய்யும் பொழுது அந்த இலையின் பின்பக்க நரம்பு இறைவனின் திருமேனி மீது படும்படி செய்ய வேண்டும்.

🔥 சிவனுக்கு சாற்றிய வில்வத்தை ஒரு மாத காலத்திற்கு நீரில் கழுவிவிட்டு மீண்டும் உபயோகம் செய்யலாம்.

சிவலோக பதவி கிடைக்க :

🔥 உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் காக்கும் பொருட்டு சிவ மேனியில் சந்தனத்துடன் கஸ்தூரி மஞ்சள், கோரோசனை, குங்குமப்பூ மற்றும் பச்சை கற்பூரம் ஆகியவற்றை கலந்து காப்பு அணிவிக்கிறார்கள். இக்கோலத்தை தரிசிப்பவர்களுக்கு கோடி வருடம் சிவலோக பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

🔥 சிவாலய திருப்பணிகளில் உங்களால் முடிந்த உதவிகளை செய்வதன் மூலம் உங்கள் சந்ததியினரே வளமாக வாழ்வார்கள். நீங்கள் செய்யும் சிறு உதவியும் குலம் தழைக்க உதவும்.

Scroll to Top