You cannot copy content of this page

@admin

admin

தீபாவளி

தீபாவளி. இந்து மத கலாச்சார பழக்க, வழக்கங்களில் சாஸ்த்திரம், சம்பிரதாயம், திருவிழாக்கள், பண்டிகைகள், போன்றவைகள் மனிதகுல வாழ்க்கையின் நல் வாழ்விற்காக உருவாக்கப்பட்டவைகள் ஆகும்.. தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று. நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். தீபாவளி என்பது சமஸ்கிருத சொல்லாகும். சமஸ்கிருதத்தில் ‘தீபம்’ என்றால் விளக்கு, ‘ஆவளி’ என்றால் வரிசை என பொருட்படும். எனவே, தீபாவளி என்பது வரிசையாக விளக்குகள் ஏற்றி வைத்து கொண்டாடும் பண்டிகையாகும். வாழ்வில் …

தீபாவளி Read More »

உணவு எப்படி இருக்க வேண்டும்!

உணவில் உள்ள இனிப்பான பண்டங்கள் மற்றும் கறிகளை முதலிலும், கசப்பு சுவையுடைய பண்டங்களை இறுதியிலும், மற்ற சுவைகளைக் கொண்ட உணவுகளை இடையிலும் உண்ண வேண்டும். ” ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்ற திருமூலர் வாக்கில் தொடங்கி ‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ என்ற பழமொழி வரை அனைத்தும் உணவின் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் பெறப்படும் உடல்நலத்தையும் எடுத்துரைப்பதாகவே உள்ளன. இரண்டடிக் குறள், ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ என்கிறது. முன்பு …

உணவு எப்படி இருக்க வேண்டும்! Read More »

அளவற்ற பலன்களை அள்ளித் தரும் கோபத்ம விரதம்!

விரதங்களில் முதன்மையானதும் மகிமை வாய்ந்ததுமாக கருதப்படுவது ஏகாதசி விரதமாகும். வருடத்தில் ஒவ்வொரு மாதத்திலும் ஏகாதசிகள் வந்தாலும் ஆடி மாதத்தில் வரும் சுக்ல பட்ச ஏகாதசி சொல்லொனா சிறப்புகள் வாய்க்கப்பெற்றது இந்த நாளில் பசுக்களுக்கு பூஜை செய்து அகத்திக்கீரையை அளித்தால் லட்சுமி கடாட்சம் கண்டிப்பாக நமக்கு கிட்டும். இந்நாளில் அன்னதானம் செய்தால் நன்மைகள் பல கிடைக்கும் என்பது ஐதீகம். கோமாதா:நமது நாட்டில் ‘கோ’ எனும் பசு மாட்டைத் தாயாகவும், கடவுளாகவும் வணங்குகின்றோம். பசுவானது தன்னுடைய கன்றுக்கும் பால் கொடுத்து …

அளவற்ற பலன்களை அள்ளித் தரும் கோபத்ம விரதம்! Read More »

அர்ச்சுணன் கர்ணன் யுத்தம் வியாசர் அருளியது

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “{தன் மகன்} விருஷசேனன் கொல்லப்பட்டதைக் கண்ட கர்ணன், துயரத்தாலும், சினத்தாலும் நிறைந்து, தன் மகனின் மரணத்திற்காகக் கண்களில் கண்ணீரைச் சிந்தினான்.(1) பெரும் சக்தியையும், சினத்தால் தாமிரமெனச் சிவந்த கண்களையும் கொண்ட கர்ணன், தன் எதிரியான தனஞ்சயனை {அர்ஜுனனைப்} போருக்கழைத்து, அவன் முகத்திற்கு நேராகச் சென்றான்.(2) அப்போது சூரியப் பிரகாசம் கொண்டவையும், புலித் தோல்களால் மூடப்பட்டவையுமான அந்தத் தேர்கள் இரண்டும், அருகருகே இருக்கும் இரு சூரியன்களைப் போலத் தெரிந்தன.(3) வெண் குதிரைகளைக் கொண்டவர்களும், எதிரிகளை …

அர்ச்சுணன் கர்ணன் யுத்தம் வியாசர் அருளியது Read More »

நெய்யை எந்த உணவுடன் சேர்த்து உண்பது உடலுக்கு நன்மை தரும்?

நெய்யை எந்த உணவுடன் சேர்த்து உண்பது உடலுக்கு நன்மை தரும்? நெய்யை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, கட்டயமாக உப்பு சேர்த்து உண்ண வேண்டும். மதிய உணவில் அரை தேக்கரண்டி நெய் சேர்த்து உண்பது நல்லதாகும். உணவில் முதல் கவளத்திலேயே நெய் பிசைந்து உண்ண வேண்டும். உப்பில்லாமல் நெய் சேர்த்து உண்பதை கட்டாயமாக தவிர்த்து விடுங்கள். தோசை சுடும் போதும் எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்து சுட்டால், நெய்யை மிகக் குறைவான அளவிலே சேர்ப்பது நல்லதாகும். இரவில் …

நெய்யை எந்த உணவுடன் சேர்த்து உண்பது உடலுக்கு நன்மை தரும்? Read More »

சிவபெருமானை வழிபடுங்கள்…!!

சிவனை வணங்கும் முறை : 🔥 சிவாலயங்களில் இறைவனை வணங்கும் பொழுது பலிபீடத்திற்கு அருகில் நின்றுதான் வணங்க வேண்டும். 🔥 சன்னிதி கிழக்கு நோக்கி இருந்தால் பலிபீடத்திற்கு தென்கிழக்கு மூலையில் நின்று வணங்க வேண்டும். 🔥 தெற்கு மற்றும் மேற்கு நோக்கிய சன்னிதி இருந்தால் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் நின்று வணங்க வேண்டும். 🔥 சன்னிதி வடக்கு நோக்கி இருந்தால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் நின்று வணங்க வேண்டும். 🔥 சிவாலயங்களில் கொடிமரத்திற்கு அருகில் நின்று மூன்று …

சிவபெருமானை வழிபடுங்கள்…!! Read More »

இந்து சமய சடங்குகள்

இந்து சமய சடங்குகள் இந்துக்கள் தங்களின் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான சில சடங்குகளை தர்மநூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. சடங்கு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி எனப் பொருள்படும். சடங்குகளை எளிமையான முறையில் மேற்கொள்வதே சிறப்பாகும். இவை சம்ஸ்காரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்துக்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ‘சம்ஸ்காரமும்’ ஒன்றாகும். ’சம்ஸ்காரம்’ என்றால் முறைப்படுத்துதல் அல்லது தயார்படுத்துதல் எனப் பொருள்படும். கிரியசூத்திர நூல் 16 புற சடங்குகளை விவரிக்கின்றது. இந்த பதினாறு சடங்குகளும் புறத்தில் செய்யப்பட வேண்டியவை. …

இந்து சமய சடங்குகள் Read More »

அக்னீஸ்வரர் கோமதியம்மாள் திருக்கோயில்

தேவன்குறிச்சி தேவன்குறிச்சி என்னும் சிற்றூர் திருமங்கலத்திலிருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் T.கல்லுப்பட்டி – பேரையூர் சாலையில் அமைந்துள்ளது. கல்லுப்பட்டியிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தேவன்குறிச்சி. T.கல்லுப்பட்டி என்ற ஊர் பெயரில் முன்னதாக வரும் T. (தே) என்ற எழுத்து தேவன்குறிச்சியைக் குறிக்கும் (T Stands for Thevankuruchi. Kalluppadti). தேவன்குறிச்சியை மலையை நெருங்கியதுமே அக்னீஸ்வரர் கோமதியம்மாள் திருக்கோயில் தோரணவாயிலும் அடர்ந்து நிறைந்த மரங்களும் நம்மை வரவேற்கின்றன. கோவிலின் பின்னால் மிகப் பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. …

அக்னீஸ்வரர் கோமதியம்மாள் திருக்கோயில் Read More »

திருமணச் சடங்குகள்

‘திரு’ என்பது தெய்வத்தன்மை எனவும், ‘மணம்’ என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, ‘திருமணம்’ என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம். தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம் மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்யதாரணம்” எனக் கூறுவர். …

திருமணச் சடங்குகள் Read More »

இந்து மதச் சடங்குகள்

சடங்கு எனும் சொல்சடங்கு என்ற சொல்லிற்குச் ‘சட்ட’ என்ற உரிச்சொல் வேர்ச் சொல் ஆகும். சட்ட + அம் + கு = சடங்கு ‘சட்ட’ என்ற சொல்லிற்கு செவ்விதான, ஒழுங்கு முறையான என்று பொருள். ‘அம்’ என்ற சொல் அழகியது என்று பொருள் உடையது ‘கு’ என்பது தன்மையைக் குறித்ததோர் விகுதி. பண்பு+அம்+கு = பாங்கு என்று ஆகியது போல சட்ட+அம்+கு = சடங்கு என்று ஆகியது. “சட்ட நேர்ப்பட சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்” ஓர் …

இந்து மதச் சடங்குகள் Read More »

திருமூலன் துதி

திருமூலன் தனிப் பாடல் ஆக்கியோன்:சர்க்கரையப்ப வேலாயுத முத்துக்குமாரசாமி கண்ணுக்கு இனியோன் காதலன் காதலுறுபண்ணுக்கு உரியோன் பராபரன் பரமனுறைவிண்ணுக்கு வேதியன் வித்தகன் வேமியபுண்ணுக்கு மருந்தோன் பூரணன் புண்ணியனே! உத்தமன் நம்மை உய்விக்கும் நாதன்நித்தமும் நம்மை நேசிக்கும் நேசன்சித்தமும் சீவனும் உமையொரு பாகன்பித்தனும் பிறையோன் பக்தனும் ஆமே! அய்யம் தீர்த்த அய்யன் திருமூலன்கைய்யில் ஏந்திக் காக்கும் திருமூலன்மைய்யல் தீர்த்த மாதவன் திருமூலன்செய்யும் செயலின் சேயோன் திருமூலன்! திருமந்திரம் புனித மந்திரம் மூலன் புனைந்த மந்திரம்இனிய மந்திரம் ஈசன் இசைந்த மந்திரம்கனிவு …

திருமூலன் துதி Read More »

செண்பகப்பூ!

செண்பகப்பூ! மைக்கேலிய செம்பகா… இது செண்பக மரத்தின் தாவரவியல் பெயர். செண்பகம் என்ற பெயரில் ஒரு பறவை இருப்பது கூடுதல் தகவல். மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளில் தானாகவே வளரும் செண்பக மரம், மேல்நோக்கிக் குவிந்த இலைகளையும் நறுமணமுள்ள மஞ்சள் மற்றும் வெள்ளை நிறமுள்ள மலர்களையும் உடையது. இரண்டு செண்பக மரங்களை வீட்டில் வளர்த்தால் சொர்க்கத்தைக் காணலாம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும், `சௌபாக்ய விருட்சம்’ என்ற சாஸ்திரப் பெயரைக் கொண்டுள்ள இந்த மரத்தை வீட்டில் வளர்த்து செவ்வாய்க்கிழமைகளில் …

செண்பகப்பூ! Read More »

திருவாச்சி மரம் அல்லது மந்தாரை

திருவாச்சி மரம் அல்லது மந்தாரை மரம், இளமஞ்சள் நிறத்தில் அழகிய மலர்களை உடைய, இளம்பச்சை நிற இலைகளைக் கொண்ட திருவாச்சி, இன்று மிக அரிதாகக் காணப்படும் ஒரு குறுமரமாகிவிட்டது. சிருவாச்சி, இருவாச்சி, திரு ஆத்தி, மந்தாரை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுவது போலவே, திருவாச்சி மரமும் பல விதங்களில் மனிதரின் வியாதிகள் தீர, மருத்துவப் பலன்கள் தருபவை. ஆன்மீகத்திலும், சித்த வைத்தியத்திலும் பெரும் பயனாகும், திருவாச்சி, தமிழ் சங்கீத இசை உலகிலும், வாத்தியங்களுக்கு இன்றியமையாத ஒரு துணையாகவும் …

திருவாச்சி மரம் அல்லது மந்தாரை Read More »

மேலத்திருமாணிக்கம்

மதுரை- தேனி சாலையில் மதுரையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் இருக்கிறது உசிலம்பட்டி. இங்கிருந்து கோடங்கிநாயக்கன்பட்டி, தாடையம்பட்டி வழியே சுமார் 18 கி.மீ. தொலைவு பயணித்து மேலத்திருமாணிக்கம் கிராமத்தை அடையலாம். இங்கு அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயம் மிகப் பழைமையானது. ஆலய வரலாற்றுக்கு சாட்சியாகக் கல்வெட்டுகள் இருக்கின்றன. முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் சடாவர்மன் குலசேகரப் பாண்டி யன், மாறவர்மன் விக்கிரம பாண்டியன் முதலான பல மன்னர்களது கல் வெட்டுகள் இருக்கின்றன. அவற் …

மேலத்திருமாணிக்கம் Read More »

மகா சிவராத்திரி மகிமை!

மகா சிவராத்திரி மகிமை! ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமானுக்குரிய விரதங்களில் தலையாயது சிவராத்திரி விரதம். எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மைக் கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர்என்று சிவபெருமான் கூறியதாக, சிவராத்திரி புராணத்தைச் சொல்லும் ‘வரதபண்டிதம்’ என்னும் நூல் கூறுகிறது. ‘எள்ளளவும் அன்பு இல்லாதவர்கள் ஆனாலும் சரி; அன்பு கொண்டவர்களாக இருந்தாலும் சரி; சிவராத்திரி அன்று சிவபெருமானைத் தரிசித்தவர், விரதம் இருந்தவர், வழிபாடு செய்தவர் ஆகியோருக்கு நற்கதி கிடைக்கும்’ என்பதே …

மகா சிவராத்திரி மகிமை! Read More »

குளியல் ரகசியம்

குளியல் ரகசியம் *எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்னர் குளிப்பது விசேஷம். குளிப்பது அழுக்கு போறதுக்கு மட்டும் அல்ல. நம்மை சதாசர்வ காலமும் ஆக்கிரமித்து இருக்கும் காற்றின் பிடியிலிருந்து விலகி இருக்கவும்தான். எப்படி மீன் தண்ணீரில் இருக்கிறதோ அதுபோல் நாம் காற்றுக்குள் இருக்கிறோம்! *ஒன்பது கிரகங்கள் சதாசர்வ காலமும் வழிநடத்திக்கொண்டு இருக்கிறது. அவற்றின் கதிர்கள் காத்தோட கலந்துதான் நமது உடலை வந்தடைகிறது. நாம் சுவாசிக்கும் போது அது நமக்குள்ளேயும் நுழைகிறது. ஒவ்வொரு கணமும் எல்லோருக்கும் இதுதான் …

குளியல் ரகசியம் Read More »

வீட்டுத் தோட்டம்

ரோஜா ரோஜா செடிகளை நேர்த்தியாக பராமரித்தால் கொத்துக் கொத்தாய் பூக்கள் பூத்துக் குலுங்கும். ரோஜா மலரை விரும்பாத பெண்கள் எவருமே இல்லை எனலாம்.நமது மனம் கவர்ந்த இந்த ரோஜா மலர் வளர்ப்பதில் பலருக்கு ஆர்வமுள்ளது. ஆனால் அது பற்றிய வழிமுறைகள் பலருக்குத் தெரிவதில்லை. இதோ உங்களுக்குச் சில டிப்ஸ்: ரோஜா இன்று பல வண்ணங்களில் வளர்கின்றன. சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குவதை பார்த்திருக்கின்றோம். ரோஜா செடியின் வேர்ப் பகுதி இறுக்கமாக இல்லாமல் …

வீட்டுத் தோட்டம் Read More »

பூஜைக்கேற்ற பூவிது

பூஜைக்கேற்ற பூவிது சிவபெருமானுக்கு உன்மத்த சேகரன் என்று ஒரு பெயர் இருக்கிறது. உன்மத்தம் என்றால் ஊமத்தம் பூ. ஊமத்தம் பூ மீது விருப்பம் கொண்டவன் என்று பொருள். எருக்கு தும்பை ஆகிய பூக்களும் அவருக்குப் பிடிக்கும். அப்பைய தீட்சிதர் என்ற மகான் பைத்தியம் பிடித்த நிலையிலும் சிவன் மீது 50 ஸ்லோகம் கொண்ட ஸ்தோத்திரத்தை பாடினார். அதற்கு உன்மத்த பஞ்சாசத் என்று பெயர் அதில் சிவபெருமானே உன் கருணையை என்னவென்று சொல்வேன் எளிதாக கிடைப்பதும் மக்களால் பயன்படுத்தாததுமான …

பூஜைக்கேற்ற பூவிது Read More »

வில்வம்

சிவனுடைய அம்சமாக கருதப்படுவது வில்வ மரம். மூன்று, ஐந்து இலை அடுக்குகளாக வளரும் இயல்பைக் கொண்டது. வில்வத்தில் 21 வகைகள் உள்ளதாகவும், அவற்றில் மகா வில்வமும், அகண்ட வில்வமுமே பூஜைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான சிவ ஆலயங்களில் தல விருட்சமாக இருக்கும் பெருமைக்கு உரியது வில்வம். கூவிளம், கூவிளை, மாதுரம் உள்ளி்ட்ட பெயர்களிலும் வில்வம் அழைக்கப்படுகிறது. இதன் இலை, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை எல்லாமே மருத்துவத்தில் பயன்படுகின்றன. வில்வத்தின் காற்று பட்டாலே சுவாசக் கோளாறு போன்ற பிரச்சினைகளும் …

வில்வம் Read More »

276. பாடல் பெற்ற சிவத் தலங்கள்

தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 19 கோயில்கள் உள்ளன. 1]இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் 2]ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் 3]கானாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் 4]சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் 5]சிவபுரி உச்சிநாதர் திருக்கோயில் 6]திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோயில் 7]திருக்கூடலையாற்றூர். வல்லபேஸ்வரர் திருக்கோயில் 8]திருச்சோபுரம் மங்களபுரீஸ்வரர் திருக்கோயில் 9]திருத்தளூர் சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில் 10]திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில் 11]மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் 12]திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில் 13]திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் திருக்கோயில் 14]திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் …

276. பாடல் பெற்ற சிவத் தலங்கள் Read More »

தாந்த்ரீக பரிகாரங்கள்

தாந்த்ரீக பரிகாரங்கள் குளியல் மூலமே தோஷங்களை போக்குவது எப்படி தெரியுமா? நாம் இந்த பிறவியில் படும் துன்பங்களுக்கு காரணம் நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷமே என்று ஜோதிடம் கூறுகிறது. நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களை போக்க நாம் முக்கியமாக வணங்கவேண்டியது நவகிரகங்களையே… நாம் தினமும் குளிக்கும் நீரில் சிலவற்றை கலந்து குளிப்பதன் மூலமாக கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது… வாருங்கள் இது குறித்து பார்ப்போம்… சூரியனால் ஏற்படும் தோஷம் நீங்க: சிகப்பு மலர்களையோ அல்லது குங்குமப்பூவையோ …

தாந்த்ரீக பரிகாரங்கள் Read More »

சிவ தீக்கை

சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் வாழ்க்கைச் சுற்றில் திருமணத்திற்கு முந்தைய இளையோர் பருவத்தில் நிகழ்த்தப் பெற வேண்டிய வாழ்வியல் கரணங்களில் ஒன்று தீக்கைப் பெறுதல் ஆகும். தீக்கைப் பெறும் கரணம் சைவச் சிறுவர்களுக்கும் சிறுமியர்களுக்கும் நான்கு அகவையில் இருந்து ஏழு அகவைக்கு உள்ளாக நிகழ்த்தப் பெறும். “தீ” என்பது தீய்த்தலையும் “கை” என்பது செலுத்துதலையும் குறிக்கும். எனவே தீக்கை பெறுதல் என்பது தீக்கை பெறுபவரின் அறியாமையைத் தீக்குள் இட்டுத் தீய்த்து, இறைவனின் திருவருளைப் பெறும் திருநெறிக்குள் தீக்கைப் பெறுபவரைச் …

சிவ தீக்கை Read More »

சுவேதாரண்யேஸ்வரர் கோயில், எருக்கத்தம்புலியூர்

சுவேதாரண்யேஸ்வரர் கோயில் என்பது சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கோயிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். தேவாரம் பாடல் பெற்றஎருக்கத்தம்புலியூர் சுவேதாரண்யேஸ்வரர் கோயில்பெயர்புராண பெயர்(கள்):எருக்கத்தம்புலியூர், குமரேசபட்டினம், திருவெருக்கத்தம்புலியூர்பெயர்:எருக்கத்தம்புலியூர் சுவேதாரண்யேஸ்வரர் கோயில்அமைவிடம்ஊர்:இராஜேந்திர பட்டினம் (இராசேந்திர பட்டணம்)மாவட்டம்:கடலூர்மாநிலம்:தமிழ்நாடுநாடு:இந்தியாகோயில் தகவல்கள்மூலவர்:திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர், நீலகண்டேசுவரர், சுவேதார்க்கவனேசுவரர், திருக்குமரேசர்)தாயார்:வீறாமுலையம்மன் (அபின்னகுசநாயகி, நீலமலர்க்கண்ணி, நீலோற்பலாம்பாள், அபீதகுஜநாயகி)தல விருட்சம்:வெள்ளெருக்குதீர்த்தம்:கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம்பாடல்பாடல் வகை:தேவாரம்பாடியவர்கள்:சம்பந்தர்வரலாறுதொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்அமைவிடம்இச்சிவாலயம் இந்தியா தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள இராஜேந்திர பட்டினம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது …

சுவேதாரண்யேஸ்வரர் கோயில், எருக்கத்தம்புலியூர் Read More »

Scroll to Top