You cannot copy content of this page

ஆறாம் தந்திரம்

014 பக்குவன்

பக்குவன் தொழுதறி வாளர் கருதிகண் ணாகப் பழுதறியாத பரம குருவை வழியறி வார்நல் வழியறி வாளர் அழிவறி வார்மற்றை யல்லா தவரே.  1 பதைதொழிந் தேன்பர மாவுனை நாடி யதைத்தொழிந் தேன்இனி யாரொடுங் கூடேன் சிதைத்தடி யேன்வினை சிந்தனை தீர உதைத்துடை யாயுகந் தாண்டரு ளாயே.  2 பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச் சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே.  3 கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக உள்ள பொருளுடல் ஆவி …

014 பக்குவன் Read More »

013 அபக்குவன்

அபக்குவன் குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக் குருடுங் குருடுங் குழிவிழு மாறே.  1 மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி நினைப்பின் அதனின் நிழலையுங் காணார் வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார் புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே.  2 ஏயெனில் என்னென மாட்டார் பிரசைகள் வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந் தாய்முலை யாவ தறியார் தமருளோர் ஊனிலை செய்யும் உருவிலி தானே.  3 வாயொன்று சொல்லி மனமொன்று சிந்தித்து நீயொன்று செய்யல் …

013 அபக்குவன் Read More »

012 சிவ வேடம்

சிவ வேடம் அருளால் அரனுக் கடிமைய தாகிப் பொருளாந் தனதுடற் பொற்பதி நாடி இருளான தின்றி யிருஞ்செயல் அற்றோர் தெருளாம் அடிமைச் சிவவேடத் தோரே.  1 உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா உடல்கழன் றால்வேடம் உடனே கழலும் உடலுயிர் உண்மையென் றோர்ந்துகொள்ளாதார் கடலில் அகல்பட்ட கட்டையொத் தாரே.  2 மயலற் றிருளற்று மாமன மற்றுக் கயலுற்ற கண்ணியர் கையிணக் கற்றுத் தயலற் றவரோடும் தாமே தாமாகிச் செயலற் றிருப்பார் சிவவேடத் தாரே.  3 ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின் வேடங்கொண் டென்செய்வீர் …

012 சிவ வேடம் Read More »

011 ஞான வேடம்

ஞான வேடம் ஞானமி லார்வேடம் பூண்டும் நரகத்தர் ஞானமுள்ளார்வேடம்இன்றெனில்நன்முத்தர் ஞானமுளதாக வேண்டுவோர் நக்கன்பால் ஞானமுள வேட நண்ணிநிற் பாரே.  1 புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை நன்ஞானத்தோர்வேடம் பூணார் அருள்நண்ணித் துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர் பின்ஞானத் தோரொன்றும் பேசுகில்லாரே.  2 சிவஞானி கட்குஞ் சிவயோகி கட்கும் அவமான சாதனம் ஆகாது தேரில் நவமா மவர்க்கது சாதன நான்கும் உவமான மில்பொருள் உள்ளுற லாமே.  3 சுத்தித் திரிவர் கழுவடி நாய்போற் கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள் ஒத்துப் பொறியும் உடலும் …

011 ஞான வேடம் Read More »

010 திருநீறு

திருநீறு நூலுஞ் சிகையும் உணரார்நின் மூடர்கள் நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரமுயிர் ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே.  1 கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே.  2 அரசுட னாலத்தி யாகும்அக் காரம் விரவுகனலில் வியனுரு மாறி நிரவயன் நின்மலன் தான்பெற்ற நீதர் உருவம் பிரம உயர்குலம் ஆமே.  3

009 தவவேடம்

தவவேடம் தவமிக் கவரே தலையான வேடர் அவமிக் கவரே யதிகொலை வேடர் அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந் தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே.  1 பூதி யணிவது சாதன மாதியிற் காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந் தீதில் சிவயோகி சாதனந் தேரிலே.  2 யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன் றாகத்து நீறணி யங்கக் கபாலஞ் சீகத்த மாத்திரை திண்பிரம் பாகுமே.  3 காதணி குண்டலங் கண்டிகை நாதமும் ஊதுநற் சங்கும் …

009 தவவேடம் Read More »

008 அவ வேடம்

அவ வேடம் ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன் வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள் ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந் தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே.  1 ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும் மான நலங்கெடும் அப்புவி யாதலால் ஈனவர் வேடங் கழிப்பித்தல் 2 இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள்ள நன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்காம் என்ப இறைநாடி நாடோறும் நாட்டினின் மன்பதை செப்பஞ் செயின்வையம் வாழுமே.  3 இழிகுலத் தோர்வேடம் பூண்பர்மே லெய்த வழிகுலத் …

008 அவ வேடம் Read More »

007 அருளுடைமையின் ஞானம் வருதல்

அருளுடைமையின் ஞானம் வருதல் பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம் பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம் பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே.  1 தமிழ்மண் டலம்ஐந்துந் தாவிய ஞானம் உமிழ்வது போல உலகந் திரிவார் அவிழு மனமும்எம் ஆதியறிவுந் தமிழ்மண் டலம்ஐந்துந் தத்துவ மாமே.  2 புண்ணிய பாவம் இரண்டுள பூமியில் நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள் எண்ணி இரண்டையும் வேர்அறத் தப்புறத் தண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே.  3 முன்னின் றருளு முடிகின்ற காலத்து நன்னின் …

007 அருளுடைமையின் ஞானம் வருதல் Read More »

006 தவ நிந்தை

தவ நிந்தை ஓதலும் வேண்டாம் உயிர்க்குயி ருள்ளுற்றாற் காதலும் வேண்டாமெய்க் காய மிடம்கண்டாற் சாதலும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற் போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே.  1 கத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற் சத்தமும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற் சுத்தமும் வேண்டாந் துடக்கற்று நிற்றலாற் சித்தமும் வேண்டாஞ் செயலற்றிருக்கிலே.  2 விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார் விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார் விளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார் விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே.  3 கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல் தேடித் தவஞ்செய்து …

006 தவ நிந்தை Read More »

005 தவம்

தவம் ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம் நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.  1 எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமுஞ் செம்மா தவத்தின் செயலின் பெருமையும் அம்மான் திருவருள் பெற்றவர்க் கல்லால் இம்மா தவத்தின் இயல்பறி யாரே.  2 பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர் சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர் மறப்பில ராகிய மாதவஞ் செய்வார் பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே.  3 இருந்து வருந்தி எழிற்றவஞ் செய்யும் பெருந்தன்மை யாளரைப் …

005 தவம் Read More »

004 துறவு

துறவு இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித் துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட் கறப்பதி காட்டும் அமரர் பிரானே.  1 பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே மறந்து பலஇருள் நீங்க மறைந்து சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத் துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே.  2 அறவன் பிறப்பிலி யாரும் இலாதான் உறைவது காட்டகம் உண்பது பிச்சை துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப் பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.  3 நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான் நெறியில் வழுவின் …

004 துறவு Read More »

003 ஞாதுரு ஞான ஞேயம்

ஞாதுரு ஞான ஞேயம் நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப் பாங்கான பாசம் படரா படரினும் ஆங்கார நீங்கி யதநிலை நிற்கவே நீங்கா அமுத நிலைபெற லாமே.  1 ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும் ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும் ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர் ஆயத்தில் நின்ற அறிவறி வாரே.  2 தானென் றவனென் றிரண்டாகும் தத்துவந் தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டு தானென்ற பூவை யவனடி சாத்தினால் நானென் றவனென்கை நல்லதொன் றன்றே.  3 வைச்சன வாறாறு மாற்றியெனவைத்து மெச்சப் …

003 ஞாதுரு ஞான ஞேயம் Read More »

002 திருவடிப் பேறு

திருவடிப் பேறு இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே பசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச் சிவந்த குருவந்து சென்னிகை வைக்க உவந்த குருபதம் உள்ளத் துவந்ததே.  1 தாடந்த போதே தலைதந்த எம்மிறை வாள்தந்த ஞான வலியையுந் தந்திட்டு வீடந்த மின்றியே யாள்கென விட்டருட் பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே.  2 தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்னந்தி தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.  3 உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத் திரையற்ற …

002 திருவடிப் பேறு Read More »

001 சிவகுரு தரிசனம்

சிவகுரு தரிசனம் பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச் சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச் சத்தும் அசத்துஞ் சதசத்துங் காட்டலாற் சித்தம் இறையே சிவகுரு வாமே.  1 பாசத்தைக் கூட்டியே கட்டுப் பறித்திட்டு நேசித்த காயம் விடிவித்து நேர்நேரே கூசற்ற முத்தியிற் கூட்டலா நாட்டத்த தாசற்ற சற்குரு அம்பலமாமே.  2 சித்திகள் எட்டோடுந் திண்சிவ மாக்கிய சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச் சத்தியும்மந்திர சாதக போதமும் பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே.  3 எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய் நல்லார் உள்ளத்து மிக்கருள் …

001 சிவகுரு தரிசனம் Read More »

Scroll to Top