You cannot copy content of this page

எட்டாம் தந்திரம்

043 சோதனை

சோதனை பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து அம்மா னடிதந் தருட்கடல் ஆடினோம் எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச் சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே.  1 அறிவுடை யானரு மாமறை யுள்ளே செறிவுடை யான்மிகு தேவர்க்குந் தேவன் பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த குறியுடை யானொடுங் கூடுவன் நானே.  2 அறிவறி வென்றங் கரற்றும் உலகம் அறிவறி யாமையை யாரும் அறியார் அறிவறி யாமை கடந்தறி வானால் அறிவறி யாமை யழகிய வாறே.  3 குறியாக் குறியினிற் கூடாத கூட்டத் தறியா அறிவில் …

043 சோதனை Read More »

042 முத்தியுடைமை

முத்தியுடைமை முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத் தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி மெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப் பத்தியி லுற்றோர் பரானந்த போதரே.  1 வளங்கனி தேடிய வன்றாட் பறவை உளங்கனி தேடி யுழிதரும் போது களங்கனி யங்கியிற் கைவிளக் கேற்றி நலங் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே.  2

041 பக்தியுடைமை

பக்தியுடைமை முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும் அத்தனை மாயா அமரர் பிரான்தனைச் சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப் பத்தர் பரசும் பசுபதி தானென்றே.  1 அடியார் அடியார் அடியார்க் கடிமைக் கடியனாய் நல்கிட் டடிமையும் பூண்டேன் அடியார் அருளால் அவனடி கூட அடியா னிவனென் றடிமைகொண் டானே.  2 நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும் ஆரிக் கடனந்தி யாமா ரறிபவர் பாரிற் பயனாரைப் பார்க்கிலும் நேரியர் ஊரில் உமாபதி யாகிநின் றானே.  3 ஒத்துல கேழும் அறியா ஒருவனென் றத்தன் இருந்திடம் …

041 பக்தியுடைமை Read More »

040 அவா அறுத்தல்

அவா அறுத்தல் வாசியும் ஊசியும் பேசி வகையினால் பேசி இருந்து பிதற்றிப் பயனில்லை ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின் ஈசன் இருந்த இடம் எளிதாமே.  1 மாடத்து ளானலன் மண்டபத் தானலன் கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன் வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில் மூடத்து ளேநின்று முத்திதந் தானே.  2 ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள் ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாமே.  3 அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே படுவழி …

040 அவா அறுத்தல் Read More »

039 ஞானி செயல்

ஞானி செயல் முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர் பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள் தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள் நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே.  1 தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பர்கள் பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள் சென்னியின் வைத்த சிவனரு ளாலே.  2 மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும் மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா மனவாக்குக் கெட்டவர் வாதனை தன்னால் தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே.  3

038 வாய்மை

வாய்மை அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள் குற்ற மறுத்தபொன் போலுங் கனலிடை அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில் செற்றம் அறுத்த செழுஞ்சுட ராகுமே.  1 எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில் எல்லாம் அறிந்த இறையென லாமே.  2 தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து கலைநின்ற கள்வனை கண்டுகொண் டேனே.  3 தானே யுலகில் தலைவ னெனத்தகும் தானே யுலகுக்கோர் …

038 வாய்மை Read More »

037 விசுவக் கிராசம்

விசுவக் கிராசம் அழிகின்ற சாயா புருடனைப் போலக் கழிகின்ற நீரிற் குமிழியைக் காணில் எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப் பொழிகின்ற இவ்வுடற் போமப் பரத்தே.  1 உடலும் உயிரும் ஒழிவற ஒன்றிற் படருஞ் சிவசத்தி தாமே பரமாம் உடலைவிட் டிந்த உயிரெங்கு மாகிக் கடையுந் தலையுங் கரக்குஞ் சிவத்தே.  2 செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம் அவியின் றியமன மாதிகள் ஐந்துங் குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து தவிர்வொன் றிலாத சராசரந் தானே.  3 பரனெங்கு மாரப் பரந்துற்று நிற்கும் திரனெங்கு …

037 விசுவக் கிராசம் Read More »

036 தத்துவமசி வாக்கியம்

தத்துவமசி வாக்கியம் சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார் தாவு பரதுரி யத்தனில் தற்பதம் மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பத மோவி விடும் தத் துவமசி உண்மையே.  1 ஆறா றகன்ற அணுத்தொம் பதஞ்சுத்தம் ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப் பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து வீறான தொந்தத் தசிதத்வ மசியே.  2 ஆகிய வச்சோயம் தேவகத் தன்னிடத்து ஆகிய விட்டு விடாத விலக்கணைத்து ஆருப சாந்தமே தொந்தத் தசியென்ப ஆகிய சீவன் பரன்சிவ னாமே.  3 துவந்தத் தசியே தொந்தத் தசியும் …

036 தத்துவமசி வாக்கியம் Read More »

035 இலக்கணாத்திரையம்

இலக்கணாத்திரையம் விட்ட விலக்கணைதான்போம் வியோமத்துத் தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும் விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியிற் சுட்டு மிலக்கணா தீதஞ் சொருபமே.  1 வில்லின் விசைநாணிற்கோத்திலக்கெய்தபின் கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன இல்லு ளிருந்தெறி கூரும் ஒருவற்குக் கல்கலன் என்னக் கதிரெதி ராமே.  2

034 முத்திநிந்தை

முத்திநிந்தை பரகதி யுண்டென இல்லையென் போர்கள் நரகதி செல்வது ஞாலம் அறியும் இரகதி செய்திடு வார்கடை தோறும் துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே.  1 கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள் பாடகில் லாரவன் செய்த பரிசறிந் தாடவல் லாரவர் பேறெது வாமே.  2 புறப்பட்டுப் போகும் புகுதுமென் னெஞ்சில் திறப்பட்ட சிந்தையைப் தெய்வமென் றெண்ணி அறப்பட்ட மற்றப் பதியென் றழைத்தேன் இறப்பற்றி னேன்இங் கிதென்னென்கின் றானே  3 திடரிடை நில்லாத நீர்போல் ஆங்கே உடலிடை நில்லா …

034 முத்திநிந்தை Read More »

033 சுத்தான்அசுத்தம்

சுத்தான்அசுத்தம் நாசி நுனியினின் நான்மூ விரலிடை ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர் பேசி யிருக்கும் பெருமறை யம்மறை கூசி யிருக்குங் குணமது வாமே.  1 கருமங்கள் ஒன்று கருதுங் கருமத் துரிமையுங் கன்மமும் உன்னும் பிறவிப் கருவினை யாவது கண்டகன் றன்பின் புரிவன கன்மக் கயத்துட் புகுமே.  2 மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள் மாயை மறைய வெளிப்படும் அப்பொருள் மாயை மறைய மறையவல் லார்கட்குக் காயமும் இல்லை கருத்தில்லை தானே.  3 மோழை யடைந்து முழைதிறந் துள்புக்குக் கோழை யடைகின்ற …

033 சுத்தான்அசுத்தம் Read More »

032 ஒன்பான் அபிமானி

ஒன்பான் அபிமானி தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன் நற்பத விராட்டன்பொன் கெற்பனவ் யாகிர்தன் பிற்பதஞ் சொலிதையன் பிரசா பத்தியன் பொற்புவி சாந்தன் பொருதபி மானியே.  1 நவமாம் அவத்தை நனவாதி பற்றிற் பவமா மலங்குணம் பற்றற்றுப் பற்றாத் தவமான சத்திய ஞானப் பொதுவிற் றுவமார் துரியஞ் சொருபம தாமே.  2 சிவமான சிந்தையிற் சீவன் சிதைய பவமான மும்மலம் பாறிப் பறிய நவமான அந்தத்தின் நற்சிவ போதந் தவமான மவையாகித் தானல்ல வாகுமே.  3 முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவந் தன்சொல்லில் …

032 ஒன்பான் அபிமானி Read More »

031 எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை

எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும் துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு மதிக்கும் குபேரன் வடதிசை யீசன் நிதித்தெண் டிசையு நிறைந்துநின் றாரே.  1 ஒருங்கிய பூவுமோர் எட்டித ழாகும் மருங்கிய மாயா புரியத னுள்ளே சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே ஒருங்கிய சோதியை ஒர்ந்தெழும் உய்ந்தே.  2 மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும் விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர் எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற் பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவே.  3 ஆறே யருவி யகங்குளம் …

031 எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை Read More »

030 புறங்கூறாமை

புறங்கூறாமை பிறையுள் கிடந்த முயலை எறிவான் அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக் கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார் நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே.  1 கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக் கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே அருந்தா அலைகடல் ஆறுசென் றாலே.  2 கருதலர் மாளக் கருவாயில் நின்ற பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால் தருவலர் கேட்ட தனியும்ப ராமே.  3 பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும் இணங்கிஎம் ஈசனே …

030 புறங்கூறாமை Read More »

029 உபசாந்தம்

உபசாந்தம் முத்திக்கு வித்து முதல்வன்தன் ஞானமே பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல் சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.  1 காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள் காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி காரிய காரண வாதனைப் பற்றறப் பாரண வும் உப சாந்தப் பரிசிதே.  2 அன்ன துரியமே ஆத்தும சுத்தியும் முன்னிய சாக்கிரா தீதத் துறுபுரி மன்னும் பரங்காட்சி யாவது உடனுற்றுத் தன்னின் வியாத்தி தனில்உப சாந்தமே.  3 ஆறாற மைந்துஆண வத்தையுள் நீக்குதல் பேறான …

029 உபசாந்தம் Read More »

028 காரிய காரண உபாதி

காரிய காரண உபாதி செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும் பற்றும் பரோபதி ஏழும் பகருரை உற்றிடும் காரிய காரணத் தோடற அற்றிட அச்சிவ மாகும் அணுவனே.  1 ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு வேறாய் நனவு மிகுந்த கனாநனா ஆறாறு அகன்ற சுழுத்தி அதில் எய்தாப் பேறா நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.  2 அகாரம் உயிரே உகாரம் பரமே மகாரம் சிவமாய் வருமுப் பதத்துச் சிகாரம் சிவமே வகாரம் பரமே யகாரம் உயிரென்று அறையலும் ஆமே.  3 உயிர்க்குயி ராகி ஒழிவற்று …

028 காரிய காரண உபாதி Read More »

027 முப்பாழ்

முப்பாழ் காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக் காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக் காரிய காரண வாதனை கண்டறும் சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே.  1 மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன் சேயமுப் பாழெனச் சிவசத்தி யில் சீவன் ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத் தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே.  2 எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும் பதியெனும் நந்தி பதமது கூடக் கதியெனப் பாழைக் கடந்து அந்தக் கற்பனை உதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.  3 துரியம் அடங்கிய சொல்லறும் பாழை …

027 முப்பாழ் Read More »

026 முச்சூனிய தொந்தத்தசி

முச்சூனிய தொந்தத்தசி தற்பதம் தொம்பதம் தானாம் அசிபதம் தொல்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றவே நிற்பது உயிர்பரன் நிகழ்சிவ மும்மூன்றின் சொற்பத மாகும் தொந்தத் தசியே.  1 தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி தொந்தத் தசிமூன்றில் தொல்தா மதமாதி வந்த மலம்குணம் மாளச் சிவம்தோன்றின் இந்துவின் முன்இருள் ஏகுதல் ஒக்குமே.  2 தொந்தத் தசியைஅவ் வாசியில் தோற்றியே அந்த முறைஈர் ஐந்தாக மதித்திட்டு அந்தம் இல்லாத அவத்தைஅவ் வாக்கியத்து உந்து முறையில் சிவமுன்வைத்து ஓதிடே.  3 வைத்துச் சிவத்தை மதிசொரு பானந்தத்து உய்த்துப் …

026 முச்சூனிய தொந்தத்தசி Read More »

025 முக்கரணம்

முக்கரணம் இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன் கடன் உறும் அவ்வுரு வேறெனக்காணும் திடமது போலச் சிவபர சீவர் உடனுரை பேதமும் ஒன்றென லாமே.  1 ஒளியைஒளிசெய்து ஓம்என்று எழுப்பி வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி வெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத் தெளியத் தெளியும் சிவபதம் தானே.  2 முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅக் கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்தி மிக்க மனோன்மணி வேறே தனித்துஏக ஒக்குமது உன்மனி ஓதுஉள் சமாதியே.  3

024 முச்சொரூபம்

முச்சொரூபம் ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைத்து ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு வேறும் எனமுச் சொரூபத்து வீடுற்று அங்கு ஈறதில் பண்டைப் பரன்உண்மை செய்யுமே.  1 மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம் மூன்றினில் முப்பத் தாறும் உதிப்புள மூன்றினின் உள்ளே முளைத்தெழும் சோதியைக் காண்டலும் காயக் கணக்கற்ற வாறே.  2 உலகம் புடைபெயர்ந்து ஊழியும் போன நிலவு சுடரொளி மூன்றும் ஒன்றாய பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன் அளவும் பெருமையும் ஆரறி வாரே.  3 பெருவாய் முதலெண்ணும் பேதமே பேதித்து அருவாய் …

024 முச்சொரூபம் Read More »

023 மும்முத்தி

மும்முத்தி சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்தி ஓய்உப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம் மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய் ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே.  1 ஆவது அறியார் உயிர்பிறப் பாலுறும் ஆவது அறியும் உயிர்அருட் பாலுறும் ஆவது ஒன்றில்லை அகம்புறத் தென்றுஅகன்று ஓவு சிவனுடன் ஒன்றாதல் முத்தியே.  2 சிவமாகி மும்மலம் முக்குணம் செற்றுத் தவமான மும்முத்தி தத்துவத்து அயிக்கியத் துவம்ஆ கியநெறி சோகம்என் போர்க்குச் சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.  3 சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய சுத்தியும் முத்தீ …

023 மும்முத்தி Read More »

022 முத்திரியம்

முத்திரியம் நனவாதி மூன்றினில் சீவ துரியம் தனதுஆதி மூன்றினில் பரதுரி யந்தான் நனவாதி மூன்றி னில்சிவ துரியமாம் இனதாகும் தொந்தத் தசிபதத் துஈடே.  1 தானாம் நனவில் துரியம்தன் தொம்பதம் தானாம் துரியம் நனவாதி தான்மூன்றில் ஆனாப் பரபதம் அற்றது அருநனா வானான மேல்மூன்றில் துரியம் அணுகுமே.  2 அணுவின் துரியத்து நான்கும துஆகிப் பணியும் பரதுரி யம்பயில் நான்கும் தணிவில் பரமாகிச் சார் முத்துரியக் கணுவில் இந் நான்கும் கலந்தவீரைந்தே.  3 ஈர்ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள் நேர்அந்த மாகநெறிவழி …

022 முத்திரியம் Read More »

021 பரலட்சணம்

பரலட்சணம் அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி அதீதத்து ளாகி அறிவிலோன் ஆன்மா மதிபெற் றிருள்விட்ட மன்னுயிர் ஒன்றாம் பதியிற் பதியும் பரவுயிர் தானே.  1 ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி சோதிப் பரஞ்சுடர் தோன்றத்தோன் றாமையின் நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.  2 துரியங் கடந்து துரியா தீதத்தே அரிய வியோகங்கொண்டு அம்பலத் தாடும் பெரிய பிரானைப் பிரணவக் கூபத்தே துரியவல் லார்க்குத் துரிசில்லை தானே.  3 செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிவபோல் அம்மெய்ப் பரத்தோடு …

021 பரலட்சணம் Read More »

Scroll to Top