You cannot copy content of this page

ஏழாம் தந்திரம்

038 இதோபதேசம்

இதோபதேசம் மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும் பறந்துஅல மந்து படுதுயர் தீர்ப்பான் சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.  1 செல்லும் அளவு செலுத்துமின் சிந்தையை வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை நல்ல அரநெறி நாடுமின் நீரே.  2 ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே.  3 போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை நாற்றிசைக் கும்நடு …

038 இதோபதேசம் Read More »

037 கேடு கண்டு இரங்கல்

கேடு கண்டு இரங்கல் வித்துப் பொதிவார் விதைவிட்டு நாற்றுவார் அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள் உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார் முற்றொளி தீயின் முனிகின்ற வாறே.  1 போது சடக்கெனப் போகின் றதுகண்டும் வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து ஆதியை அன்பில் அறியகில் லார்களே.  2 கடன்கொண்டு நெற்குத்துக் கையரை யூட்டி உடம்பினை ஓம்பி உயிராத் திரிவார் தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி இடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே.  3 விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து …

037 கேடு கண்டு இரங்கல் Read More »

036 கூடா ஒழுக்கம்

கூடா ஒழுக்கம் கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார் கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால் கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக் கண்காணி கண்டார் களஒழிந் தாரே.  1 செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர் தொழச் செய்வன் மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.  2 பத்திவிற் றுண்டு பகலைக் கழிவிடும் மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும் பித்தர்கட்கு என்றும் பிறப்பில்லை தானே.  3 வடக்கு வடக்கென்பர் வைத்ததுஒன்று இல்லை …

036 கூடா ஒழுக்கம் Read More »

035 சற்குரு நெறி

சற்குரு நெறி தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன் தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன் தாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே.  1 தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள் தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம் தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம் தவிரவைத் தான் பிற வித்துயர் தானே.  2 கறுத்த இரும்பே கனகமது ஆனால் மறித்துஇரும் பாகா வகையது போலக் குறித்தஅப் போதே குருவருள் பெற்றான் மறித்துப் பிறவியல் வந்தணு கானே.  3 பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும் …

035 சற்குரு நெறி Read More »

034 அசற்குரு நெறி

அசற்குரு நெறி உணர்வுஒன்று இலாமூடன் உண்மைஒ ராதோன் கணுவின்றி வேதா கமநெறி காணான் பணிஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன் அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.  1 மந்திர தந்திர மாயோக ஞானமும் பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர் சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டு அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே.  2 ஆமாது அறியாதோன் மூடன் அதிமூடன் காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு ஆமாறு அசத்துஅறி விப்போன் அறிவிலோன் கோமான் அலன்அசத் தாகும் குரவனே.  3 கற்பாய கற்பங்கள் நீக்காமற் கற்பித்தால் தற்பாவங் …

034 அசற்குரு நெறி Read More »

033 ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை

ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம் வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன பட்டன மீன்பல பரவன் வகைகொணர்ந்து இட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே.  1 கிடக்கும் உடலின் கிளர்இந் திரியம் அடக்க லுறும் அவன்தானே அமரன் விடக்கிரண்டு இன்புற மேவுறு சிந்தை நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே.  2 அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை அஞ்சும் அடக்கில் அசேதன மாம்என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.  3 முழக்கி எழுவன மும்மத …

033 ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை Read More »

032 ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை

ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை ஆக மதத்தன ஐந்து களிறுள ஆக மதத்தறி யோடுஅணை கின்றில பாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின் யோகு திருந்துதல் ஒன்று அறி யோமே.  1 கருத்தின்நன் னூல்கற்று கால்கொத்திப் பாகன் திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா எருத்துற ஏறி இருக்கிலும் ஆங்கே வருத்தினும் அம்மா வழிநட வாதே.  2 புலம் ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும் நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன் உலம்வந்து போம்வழி ஒன்பது தானே.  3 …

032 ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை Read More »

031 போதன்

போதன் சீவன் எனச்சிவன் என்னவே றில்லை சீவ னார்சிவ னாரை அறிகிலர் சீவ னார்சிவ னாரை அறிந்தபின் சீவ னார்சிவ னாயிட்டு இருப்பரே.  1 குணவிளக் காகிய கூத்தப் பிரானும் மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம் பணவிளக் காகிய பல்தலை நாகம் கணவிளக் காகிய கண்காணி யாகுமே.  2 அறிவாய் அறியாமை நீங்கி யவனே பொறிவாய் ஒழிந்தெங்கும் தானான போதன் அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன் செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே.  3 ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு ஆறாறின் தன்மை …

031 போதன் Read More »

030 பசு

பசு கற்ற பசுக்கள் கதறித் திரியினும் கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போது மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே.  1 கொல்லையின் மேயும் பசுக்களைச் செய்வதென் எல்லை கடப்பித்து இறைவன் அடிகூட்டி வல்லசெய்து ஆற்ற மதித்தபின் அல்லது கொல்லை செய் நெஞ்சம் குறிப்பறி யாதே.  2

029 சீவன்

சீவன் மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறுநூ றாயிரத்து ஒன்றே.  1 ஏனோர் பெருமையன் ஆயினும் எம்மிறை ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தின் அளவே.  2 உண்டு தெளிவன் உரைக்க வியோகமே கொண்டு பயிலும் குணமில்லை யாயினும் பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக் கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே.  3 மாயா உபாதி வசத்தாகும் சேதனத்து ஆய குருஅரு …

029 சீவன் Read More »

028 புருடன்

புருடன் வைகரி யாதியும் மாயா மலாதியும் பொய்கரி யான புருடாதி பேதமும் மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச் செய்கரி ஈசன் அனாதியே செய்ததே.  1 அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே.  2 படர்கொண்ட ஆலதின் வித்தது போலச் சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்ய இடர்கொண்ட பாச இருளற ஓட்டி நடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே.  3 அணுவுள் அவனும் அவனுள் அணுவும் கணுஅற நின்ற …

028 புருடன் Read More »

027 பசு இலக்கணம்

பசு இலக்கணம் உன்னும் அளவில் உணரும் ஒருவனைப் பன்னு மறைகள் பயிலும் பரமனை என்னுள் இருக்கும் இளையா விளக்கினை அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே.  1 அன்னம் இரண்டுள ஆற்றம் கரையினில் துன்னி இரண்டும் துணைப்பிரி யாதுஅன்னம் தன்னிலை அன்னம் தனியொன்றது என்றக்கால் பின்ன மடஅன்னம் பேறணு காதே.  2

026 சிவாதித்தன்

சிவாதித்தன் அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும் சென்றிடு ஞானச் சிவப்பர காசத்தால் ஒன்றும் இருசுட ராம்அரு ணோதயம் துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.  1 கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில் அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான் விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து அடங்கிட நின்றதும் அப்பரி சாமே.  2 தானே விரிசுடர் மூன்றும்ஒன்றாய் நிற்கும் தானே அயன்மால் எனநின்று தாபிக்கும் தானே உடலுயிர் வேறன்றி நின்றுளன் தானே வெளியொளி தானிருட் டாமே.  3 தெய்வச் சுடர்அங்கி ஞாயிறும் திங்களும் வையம் …

026 சிவாதித்தன் Read More »

025 ஞானாதித்தன்

ஞானாதித்தன் விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்து அந்த அபரம் பரநாத மாகியே வந்தன தம்மில் பரங்கலை யாதிவைத்து உந்தும் அருணோ தயமென்ன உள்ளத்தே.  1 உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான் தெள்ளும் பரநாதத் தின்செயல் என்பதால் வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்கு உள்ளன ஐங்கலைக்கு ஒன்றாம் உதயமே.  2 தேவர் பிரான்திசை பத்துஉத யஞ்செய்யும் மூவர் பிரான்என முன்னொரு காலத்து நால்வர் பிரான்நடு வாயுரை யாநிற்கும் மேவு பிரான்என்பர் விண்ணவர் தாமே.  3 பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை மையிருள் நீக்கும் …

025 ஞானாதித்தன் Read More »

024 மன ஆதித்தன்

மன ஆதித்தன் எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும் எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப விரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவி ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே.  1 சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை முந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறை அந்த இரண்டும் உபய நிலத்தில் சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே.  2 ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதி ஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர் ஆகும் அருக்கன் அனல்மதி யோடுஒன்ற ஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே.  3 ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய …

024 மன ஆதித்தன் Read More »

023 பிண்டாதித்தன்

பிண்டாதித்தன் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன் கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.  1 ஆதித்தன் ஓடி அடங்கும் இடங்கண்டு சாதிக்க வல்லவர் தம்மை யுணர்ந்தவர் பேதித்து உலகம் பிதற்றும் பிதற்றெல்லாம் ஆதித்தனோடே அடங்குகின் றாரே.  2 உருவிப் புறப்பட்டு உலகை வலம்வந்து சொருகிக் கிடக்கும் துறையறி வார்இல்லை சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு உருகிக் கிடக்கும்என் உள்ளன்பு தானே.  3

022 ஆதி நிலை

ஆதி நிலை செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள் மஞ்சுடை மேரு வலம்வரு காரணம் எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி தஞ்சுட ராக வணங்கும் தவமே.  1 பகலவன் மாலவன் பல்லுயிர்க்கு எல்லாம் புகலவ னாய்நின்ற புண்ணிய நாதன் இகலற ஏழுல கும்உற வோங்கும் பகலவன் பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே.  2 ஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும் சோதியின் உள்ளே சுடரொளி யாய்நிற்கும் வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும் ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.  3 தானே உலகுக்குத் தத்துவனாய் நிற்கும் தானே …

022 ஆதி நிலை Read More »

021 விந்து ஜயம்- போக சரவோட்டம்

விந்து ஜயம்- போக சரவோட்டம் பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய் ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப் பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.  1 தானே அருளால் சிவயோகம் தங்காது தானேஅக் காமாதி தங்குவோ னும் உட்கும் தானே அதிகாரம் தங்கில் சடங்கெடும் ஊனே அவற்றுள் உயிர்ஒம்பா மாயுமே.  2 மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில் ஓயா இருபக்கத்து உள்வளர் பக்கத்துள் ஏயாஎண் நாள்இன்ப மேல்பனி மூன்றிரண்டு ஆயா அபரத்துள் ஆதிநாள் ஆறாமே.  3 ஆறுஐந்து பன்னொன்றும் …

021 விந்து ஜயம்- போக சரவோட்டம் Read More »

020 விந்துற்பனம்

விந்துற்பனம் உதயத்தில் விந்துவில் ஓங்குகுண் டலியும் உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான் விதியில் பிரமாதி கள்மிகு சத்தி கதியில் கரணம் கலைவை கரியே.  1 செய்திடும் விந்துபே தத்திறன் ஐ ஐந்தும் செய்திடும் நாதபேதத்திற னாலாறும் செய்திடும் மற்றவை ஈர்இரண்டில்திறம் செய்திடும் ஆறுஆறு சேர்தத் துவங்களே.  2 வந்திடு பேத மெலாம்பர விந்து தந்திடு மாமாயை வாகேசி தற்பரை உந்து குடிலையோடு ஏமுறு குண்டலி விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே.  3 விளங்கு நிவர்த்தாதி மேவக ராதி வளங்கொள் உகாரம் மகாரத் …

020 விந்துற்பனம் Read More »

019 சமாதிக் கிரியை

சமாதிக் கிரியை அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில் வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில் நொந்து நாய்நரி நுகரின் நுண்செரு வந்துநாய் நரிக்கு உணவாகும் வையகமே.  1 எண்ணிலா ஞானி உடல்எரி தாவிடில் அண்ணல்தம் கோயில் அழல்இட்டது ஆங்கு ஒக்கும் மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம் எண்ணரு மன்னர் இழப்பார் அரசே.  2 புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும் மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம் மண்ணுலகு எல்லாம் மயங்கும் அனல்மண்டியே.  3 அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால் …

019 சமாதிக் கிரியை Read More »

018 பூரணக் குகை நெறிச் சமாதி

பூரணக் குகை நெறிச் சமாதி வளர்பிறை யில்தேவர் தம்பாலின் மன்னி உளரொளி பானுவின் உள்ளே ஒடுங்கித் தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள் உளதுறும் யோகி உடல்விட்டால் தானே.  1 தான்இவை ஒக்கும் சமாதிகை கூடாது போன வியோகி புகலிடம் போந்துபின் ஆனவை தீர நிரந்தர மாயோகம் ஆனவை சேர்வார் அருளின் சார் வாகியே.  2 தான்இவ் வகையே புவியோர் நெறிதங்கி ஆன சிவயோகத்து ஆமாறுஆம் அவ்விந்து தானதில் அந்தச் சிவயோகி ஆகுமுன் ஊனத்தோர் சித்திவந்து ஓர்காயம் ஆகுமே.  3 சிவயோகி ஞானி …

018 பூரணக் குகை நெறிச் சமாதி Read More »

017 முத்திர பேதம்

முத்திர பேதம் நாலேழு மாறவே நண்ணிய முத்திரை பாலான மோன மொழியில் பதிவித்து மேலான நந்தி திருவடி மீதுய்யக் கோலா கலங்கெட்டுக் கூடுநன் முத்தியே.  1 துரியங்கள் மூன்றுஞ் சொருகிட னாகி அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி மருவிய சாம்பவி கேசரி உண்மை பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே.  2 சாம்பவி நந்தி தன்னருள் பார்வையாம் ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரை ஓம்பயில் ஒங்கிய உண்மைய கேசரி நாம்பயில் நாதன்மெய்ஞ் ஞானமுத் திரையே.  3 தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும் ஞானத்தின் …

017 முத்திர பேதம் Read More »

016 பிட்சா விதி

பிட்சா விதி விச்சுக் கலம் உண்டு வேலிச்செய் ஒன்றுண்டு உச்சிக்கு முன்னே உழவு சமைந்தது அச்சம்கெட்டு அச்செயல்1 அறுத்துண்ண மாட்டாதார் இச்சைக்குப் பிச்சை இரக்கின்ற வாறே. 1 பிச்சையது ஏற்றான் பிரமன் தலைதன்னில் பிச்சையது ஏற்றான் பிரியா அறஞ்செய்யப் பிச்சையது ஏற்றான் பிரமன் சிரங்காட்டிப் பிச்சையது ஏற்றான் பிரமன்  2 பரந்துலகு ஏழும் படைத்த பிரானை இரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும் நிரந்தர மாக நினையும் அடியார் இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே.  3 வரஇருந் தான்வழி நின்றிடும் …

016 பிட்சா விதி Read More »

Scroll to Top