You cannot copy content of this page

இரண்டாம் தந்திரம்

025 பெரியாரைத் துணைகோடல்

பெரியாரைத் துணைகோடல் ஓடவல் லார்தம ரோடு நடாவுவன் பாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன் தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும் கூடவல் லாரடி கூடுவன் யானே.  1 தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும் மாமனத்து அங்குஅன்பு வைத்தது இலையாகும் நீஇடர்ப் பட்டிருந்து என்செய்வாய் நெஞ்சமே போமிடத் து என்னொடும் போதுகண் டாயே.  2 அறிவார் அமரர் தலைவனை நாடிச் செறிவார் பெறுவர் சிலர்தத் துவத்தை நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும் பெரியார் உடன்கூடல் பேரின்ப மாமே. 3 தார்சடை யான்தன் தமராய் …

025 பெரியாரைத் துணைகோடல் Read More »

024 பொறையுடைமை

பொறையுடைமை பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும் தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள் வற்றா தொழிவது மாகமை யாமே. 1 ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள் பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய மாலுக்கும் ஆதி பிரமற்கும் மன்னவன் ஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே 2 ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர் சேனை வளைந்து திசைதொறும் கைதொழ ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை ஏனை விளைந்தருள் எட்டலு மாமே. 3 வல்வகை யானும் மனையிலும் மன்றிலும் பல்வகை …

024 பொறையுடைமை Read More »

023 மயேசுர நிந்தை

மயேசுர நிந்தை ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள் ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்1 ஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர் தாம்தாம் விழுவது தாழ்நர காகுமே. 1 ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே ஞானியை வந்திப் பவனுமே நல்வினை யான கொடுவினை தீர்வார் அவன்வயம் போன பொழுதே புகுஞ்சிவ போகமே.  2

022 குரு நிந்தை

குரு நிந்தை பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள் உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர் கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர் பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே.  1 ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர் ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் குஓர்உகம் வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே 2 பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள் சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர் அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடும் சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே 3 மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர் சிந்தையில் …

022 குரு நிந்தை Read More »

021 சிவ நிந்தை

சிவ நிந்தை தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே அளிவுறு வார்அம ராபதி நாடி எளியனென்று ஈசனை நீசர் இகழில் கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே.  1 முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம் விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார் அளிந்தமுது ஊறிய ஆதிப் பிரானைத் தளிந்தவர்ககு அல்லது தாங்கஒண் ணாதே.  2 அப்பகை யாலே அசுரரும் தேவரும் நற்பகை செய்து நடுவே முடிந்தனர் எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப் பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே.  3 போகமும் மாதர் புலவி அதுநினைந்து ஆகமும் …

021 சிவ நிந்தை Read More »

020 அதோமுக தரிசனம்

அதோமுக தரிசனம் எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல அம்பவள மேனி அறுமுகன் போயவர் தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.  1 அண்டமொடு எண்டிசை தாங்கும் அதோமுகம் கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை உண்டது நஞ்சென்று உரைப்பர் உணர்விலோர் வெண்டலை மாலை விரிசடை யோற்கே.  2 செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப் பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள் மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச்செய்வன் மைதாழ்ந்து இலங்கும் மிடறுடை யோனே.  3 நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய செந்தீக் …

020 அதோமுக தரிசனம் Read More »

019 திருக்கோயில்

திருக்கோயில் தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால் ஆவதன் முன்னே அரசு நிலைகெடும் சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும் காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.  1 கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில் வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும் வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.  2 ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப் போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம் சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.  3 முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத் தீங்குள …

019 திருக்கோயில் Read More »

018 தீர்த்தம்

தீர்த்தம் உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப் பள்ளமும் மேடும் பரந்து திரிவரே கள்ள மனமுடைக் கல்வியி லோரே.  1 தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும் குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான் வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும் தெளியறி வாளர்தம் சிந்தையு ளானே.  2 உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக் கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லை வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப் பள்ளத்தில் இட்டதோர் பந்தருள் ளானே.  3 அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச் செறிவான் …

018 தீர்த்தம் Read More »

017 அபாத்திரம்

அபாத்திரம் கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப் பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும் சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்தது காலங் கழிந்த பயிரது ஆகுமே.  1 ஈவது யோக இயம நியமங்கள் சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி ஆவ தறிந்தன்பு தங்கா தவர்க்களுக்கு ஈவ பெரும்பிழை என்றுகொள் ளீரே.  2 ஆமாறு அறியான் அதிபஞ்ச பாதகன் தோமாறும் ஈசற்குந் தூய குரவற்கும் காமாதி விட்டோ ர்க்குந் தூடணம் கற்பிப்போன் போமா நரகில் புகான்போதங் கற்கவே.  3 மண்மலை யத்தனை மாதனம் ஈயினும் அண்ணல் …

017 அபாத்திரம் Read More »

016 பாத்திரம்

பாத்திரம் திலமத் தனையே சிவஞானிக்கு ஈந்தால் பலமுத்தி சித்தி பரபோக மும்தரும் நிலமத் தனைபொன்னை நின்மூடர்க்கு ஈந்தால் பலமும்அற் றேபர போகமும் குன்றுமே.  1 கண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக் கொண்டிருந் தாருயிர் கொள்ளும் குணத்தனை நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச் சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.  2 கைவிட்டி லேன்கரு வாகிய காலத்து மெய்விட்டி லேன்விகிர் தன்அடி தேடுவன் பொய்விட்டு நானே புரிசடை யானடி நெய்விட் டிலாத விடிஞ்சிலு மாமே.  3 ஆவன ஆவ அழிவ அழிவன போவன போவ …

016 பாத்திரம் Read More »

015 மூவகைச்சீவ வர்க்கம்

மூவகைச்சீவ வர்க்கம் சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி ஒத்த இருமாயா கூட்டத் திடைப்பூட்டிச் சுத்தம தாகுந் துரியம் புரிவித்துச் சித்தம் புகுந்து சிவமய மாக்குமே  1 விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத் தஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின் அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம் விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே  2 விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர் தஞ்ஞானர் அட்டவித் தேசுரஞ் சார்ந்துளோர் எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர் மெய்ஞ் ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே  3 இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை …

015 மூவகைச்சீவ வர்க்கம் Read More »

014 கரு உற்பத்தி

கரு உற்பத்தி ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ் சாக்குகின் றானவ னாதிஎம் ஆருயிர் ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந் தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே  1 அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச் செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிப் பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப் பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே  2 இன்புறு காலத் திருவர்முன் பூறிய துன்புறு பாசத் துயர்மனை வானுளன் பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும் அன்புறு காலத் தமைத்தொழிந் தானே  3 கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ் புருடன் …

014 கரு உற்பத்தி Read More »

013 அருளல்

அருளல் எட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு வட்டத் திரையனல் மாநிலம் ஆகாயம் ஒட்டி உயிர்நிலை என்னுமிக் காயப்பை கட்டி அவிழ்ப்பன் 1 உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமன்இல்லை விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத் தச்சு மவனே சமைக்கவல் லானே  2 குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக் குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன் குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில் அசைவில் உலகம் அதுயிது வாமே 3 விரியுடை யான்விகிர் தன்மிகு பூதப் படையுடை யான்பரி சேஉல காக்குங் …

013 அருளல் Read More »

012 மறைத்தல்

மறைத்தல் உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை உள்ளம்விட் டோ ரடி நீங்கா ஒருவனை1 உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்2 உள்ளம் அவனை உருவறி யாதே 1 இன்பப் பிறவி படைத்த இறைவனுந் துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்1 என்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை முன்பிற் கொளுவி முடிகுவ 2 இறையவன் மாதவன் இன்பம் படைத்த மறையவன் மூவரும் வந்துடன் கூடி இறையவன் செய்த இரும்பொறி யாக்கை மறையவன் வைத்த பரிசறி யாதே 3 காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை ஆண்பெண் …

012 மறைத்தல் Read More »

011 அழித்தல்

அழித்தல் அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டது அங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டது அங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டது அங்கியவ் வீசற்குக் கைஅம்பு தானே  1 இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்த நிலையன் றழிந்தமை நின்றுணர்ந் தேனால் உலைதந்த மெல்லரி போலும் உலகம் மலைதந்த மானிலந் தான்வெந் ததுவே  2 பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும் உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங் குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசம் விதஞ்செய்யும் நெஞ்சில் வியப்பில்லை தானே  3 கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி அண்டத்துள் ஊறி …

011 அழித்தல் Read More »

010 காத்தல்

காத்தல் புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப் புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப் புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப் புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே  1 தானே திசையொடு தேவரு மாய்நிற்குந் தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந் தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந் தானே உலகில் தலைவனு மாமே  2 உடலாய் உயிராய் உலகம தாகிக் கடலாய் கார்முகில் நீர்ப்பொழி வானாய் இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி அடையார் பெருவழி அண்ணல் நின்றானே 3 தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர் கூடு1 மரபிற் …

010 காத்தல் Read More »

009 படைத்தல்

படைத்தல் ஆதியோ டந்தம் இலாத பராபரம்1 போதம தாகப் புணரும் பராபரை சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந் தீதில் பரையதன் பால்திகழ் நாதமே 1 நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில் தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால் வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே  2 இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக் கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும் வல்லது ஆக வழிசெய்த அப்பொருள் சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே  3 தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய் ஆர்வத்து …

009 படைத்தல் Read More »

008 அடிமுடி தேடல்

அடிமுடி தேடல் பிரமனும் மாலும் பிரானேநான் என்னப் பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க அரனடி தேடி அரற்றுகின் றாரே.  1 ஆனே ழுலகுற நின்றஎம் அண்ணலுந் தானே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும் வானே ழுலகுறும் மாமணி கண்டனை யானே அறிந்தேன் அவனாண்மை யாலே 2 ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ் சேணாய்வா னோரங்கித் திருவுரு வாய் அண்டத் தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந் தாண்முழு தண்டமு மாகிநின் றானே  3 நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன் …

008 அடிமுடி தேடல் Read More »

007 எலும்பும் கபாலமும்

எலும்பும் கபாலமும் எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த வலம்பன் மணிமுடி வானவ ராதி எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில் எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே  1

006 சக்கரப் பேறு

சக்கரப் பேறு மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங் கால்போதகங் கையினோ டந்தரச் சக்கர மேல்போக வெள்ளி மலைஅம ராபதி பார்போக மேழும் படைத்துடை யானே  1 சக்கரம் பெற்றுநல் தாமோ தரந்தானும் சக்கரந் தன்னைத் தரிக்கவொண்1 ணாமையால் மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத் தக்கநற் சக்தியைத் தாங்கூறு செய்ததே 2 கூறது வாகக் குறித்துநற் சக்கரங் கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக் கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக் கூறது செய்து தரித்தனன் கோலமே 3 தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால் தக்கன்றன் …

006 சக்கரப் பேறு Read More »

005 பிரளயம்

பிரளயம் கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத் திருவருங் கோவென் றிகல இறைவன் ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி அருவரை யாய்நின் றருள் புரிந் தானே  1 அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர் தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டு உலகார் அழற்கண் டுள்விழா தோடி அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே  2 தண்கடல் விட்ட தமரருந் தேவரும் எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர் விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங் கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே.  3 சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி அமைக்கவல் …

005 பிரளயம் Read More »

004 தக்கன் கேள்வி

தக்கன் கேள்வி தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர் முந்திய பூசை முடியார் முறைகெட்டுச் சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே  1 சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும் எந்தை யிவனல்ல யாமே உலகினிற் பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய அந்தமி லானும் அருள்புரிந் தானே  2 அப்பரி சேயய னார்பதி வேள்வியுள் அப்பரி சேயங்கி அதிசய மாகிலும் அப்பரி சேயது நீர்மையை யுள்கலந் தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே  3 அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள் அப்பரி …

004 தக்கன் கேள்வி Read More »

003 இலிங்க புராணம்

இலிங்க புராணம் அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி முடிசேர் மலைமக னார்மக ளாகித் திடமார் தவஞ்செய்து தேவர் அறியப் படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே  1 திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன் பரிவொடு நின்று பரிசறி வானே  2 ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும் ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும் ஆழி கொடுத்தனன் அச்சுதற்க் கவ்வழி வாழி பிரமற்கும்1 வாள்கொடுத் தானே 3 தாங்கி இருபது தோளுந் தடவரை ஓங்க …

003 இலிங்க புராணம் Read More »

Scroll to Top