You cannot copy content of this page

முதல் திருமுறை

024 சீகாழி – தக்கராகம்

சீகாழி – தக்கராகம் 250 “ பூஆர் கொன்றைப் புரிபுன் சடை ஈசா!காவாய்!” என நின்று ஏத்தும் காழியார்,மேவார் புரம் மூன்று அட்டார் அவர்போல் ஆம்பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே. பொ-ரை: பாடல்களின் சொற்பொருளாய்க் கலந்து நிற்கும் பரமர், பக்தர்கள், “கொன்றைப் பூக்கள் பொருந்திய முறுக்கேறிய செஞ்சடை ஈசா காவாய்!” என நின்று துதித்துப் போற்றும் சீகாழிப் பதியினராவார். மனம் ஒன்றாத அசுரர்களின் மூன்று புரங்களை அழித்தவரும் அவரேயாவார். கு-ரை: இது பாக்களின் சொற்பொருளாய்ப் பயிலும் …

024 சீகாழி – தக்கராகம் Read More »

023 திருக்கோலக்கா – தக்கராகம்

திருக்கோலக்கா – தக்கராகம் 239 மடையில் வாளை பாய, மாதரார்குடையும் பொய்கைக் கோலக்கா உளான்சடையும், பிறையும், சாம்பல் பூச்சும், கீள்உடையும், கொண்ட உருவம் என்கொலோ? பொ-ரை: நீரைத் தேக்கி வெளிவிடும் மடையில் வாளை மீன்கள் துள்ளிப் பாயுமாறு பெண்கள் கையால் குடைந்து நீராடும் பொய்கைகளை உடைய திருக்கோலக்காவில் எழுந்தருளியுள்ள இறைவன், சடைமுடியையும், அதன்கண் பிறையையும், திருமேனி முழுவதும் திருநீற்றுப் பூச்சையும் இடையில் ஆடையாகக் கீள் உடையையும் கொண்ட உருவம் உடையவனாய் இருப்பது ஏனோ? கு-ரை: இது மாதர் …

023 திருக்கோலக்கா – தக்கராகம் Read More »

022 திருமறைக்காடு – திருவிராகம் நட்டபாடை

திருமறைக்காடு – திருவிராகம் நட்டபாடை 228 சிலை தனை நடு இடை நிறுவி, ஒரு சினம் மலி அரவு அதுகொடு, திவிதலம் மலி சுரர் அசுரர்கள், ஒலி சலசல கடல் கடைவுழி, மிகுகொலை மலி விடம் எழ, அவர் உடல் குலை தர, அதுநுகர்பவன்-எழில்மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர் தரு பரமனே. பொ-ரை: மந்தரமலையை மத்தாக நடுவே நிறுத்தி, சினம் மிக்க ஒப்பற்ற வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு, விண்ணுலகில் வாழும் …

022 திருமறைக்காடு – திருவிராகம் நட்டபாடை Read More »

021 திருச்சிவபுரம் – திருவிராகம் நட்டபாடை

திருச்சிவபுரம் – திருவிராகம் நட்டபாடை 217 புவம், வளி, கனல், புனல், புவி, கலை, உரை மறை, திரிகுணம்,அமர் நெறி,திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை, அவைதமபவம் மலி தொழில் அது நினைவொடு, பதும நல்மலர் அதுமருவியசிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே. பொ-ரை: விண், காற்று, தீ, நீர், மண் ஆகிய ஐம்பெரும் பூதங்களையும், எண்ணெண் கலைகளை உரைத்தருளும் வேதங்களையும், முக்குணங்களையும், விரும்பத்தக்க மார்க்கங்களையும், வானுலகில்வாழும் தேவர்கள் முதலியவர்களாய் விளங்கும் உயிர்களையும், …

021 திருச்சிவபுரம் – திருவிராகம் நட்டபாடை Read More »

020 திருவீழிமிழலை – திருவிராகம் நட்டபாடை

திருவீழிமிழலை – திருவிராகம் நட்டபாடை 206 தட நிலவிய மலை நிறுவி, ஒரு தழல் உமிழ்தரு பட அரவுகொடு,அடல் அசுரரொடு அமரர்கள், அலைகடல் கடைவுழி எழும்மிகு சினவிடம் அடைதரும் மிடறு உடையவன்; விடைமிசை வருமவன்;உறை பதிதிடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறைதிரு மிழலையே. பொ-ரை: பெரியதாகிய மந்தரமலையை மத்தாக நிறுத்தி அழல் போலும் கொடிய நஞ்சை உமிழும் படத்தோடு கூடிய வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கட்டி வலிய அசுரர்களோடு தேவர்கள் அலைகள் பொருந்திய …

020 திருவீழிமிழலை – திருவிராகம் நட்டபாடை Read More »

019 திருக்கழுமலம் – (திருவிராகம்) நட்டபாடை

திருக்கழுமலம் – (திருவிராகம்) நட்டபாடை 195 பிறை அணி படர் சடை முடி இடைப் பெருகிய புனல்உடையவன்; நிறைஇறை அணி வளை, இணை முலையவள், இணைவனது எழில்உடை இட வகைகறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர்கனல் உருவினன்;நறை அணி மலர் நறுவிரை புல்கு நலம் மலி கழல் தொழல்மருவுமே! பொ-ரை: பிறை அணிந்த விரிந்த சடைமுடியின்கண் பெருகிவந்த கங்கையை உடைய இறைவனும், முன்கையில் அழகிய வளையலை அணிந்த உமையம்மையின் இரண்டு தனபாரங்களோடு இணைபவனும், …

019 திருக்கழுமலம் – (திருவிராகம்) நட்டபாடை Read More »

018 திருநின்றியூர் – நட்டபாடை

திருநின்றியூர் – நட்டபாடை 185 சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், சுடு நீறு;பால் அம்மதி பவளச் சடை முடி மேலது பண்டைக்காலன் வலி காலினொடு போக்கி, கடி கமழும்நீல மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே. பொ-ரை: முன்னொரு காலத்தில் காலனின் வலிமையைக் காலால் உதைத்துப் போக்கி, மணம் கமழும் நீல மலர்கள் மலர்ந்த பொய்கைகளை உடைய திருநின்றியூரில் நிலையாக எழுந்தருளியுள்ள இறைவற்குப் படைக்கலன் சூலம். சுண்ணப்பொடியும், சாந்தமும், திருநீறே. பால் போலும் வெண்மையான பிறைமதி அவரது செந்நிறச் …

018 திருநின்றியூர் – நட்டபாடை Read More »

017 திருஇடும்பாவனம் – நட்டபாடை

திருஇடும்பாவனம் – நட்டபாடை 174 மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய்,தனம் ஆர்தரு, சங்கக் கடல் வங்கத்திரள் உந்தி,சினம் ஆர்தரு திறல் வாள் எயிற்று அரக்கன் மிகு, குன்றில்இன மா தவர் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே. பொ-ரை: மனத்தால் விரும்பப் பெற்ற மனைவியரோடு மகிழ்ச்சிமிக்க இளைஞர்களால் மலர்தூவி வழிபட்டுச் செல்வம் பெறுதற்குரியதாய் விளங்குவதும், சங்குகளை உடைய கடலில் உள்ள கப்பல்களை அலைகள் உந்தி வந்து சேர்ப்பிப்பதும் ஆகிய இடும்பாவனம், சினம் மிக்க வலிய …

017 திருஇடும்பாவனம் – நட்டபாடை Read More »

016 திருப்புள்ளமங்கைத் திருஆலந்துறை – நட்டபாடை

திருப்புள்ளமங்கைத் திருஆலந்துறை – நட்டபாடை 163 பால் உந்து உறு திரள் ஆயின பரமன், பிரமன் தான்போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புள மங்கை,காலன் திறல் அறச் சாடிய கடவுள் இடம் கருதில்,ஆலந்துறை தொழுவார் தமை அடையா, வினை தானே. பொ-ரை: பாலினின்று மிதந்து வரும் வெண்ணெய்த் திரள் போல்பவரும், காலனது வலிமை முழுவதையும் அழித்தவரும், வேதப் புலமையில் நான்முகன் போன்ற அந்தணர் வாழும் பொழில்கள் சூழ்ந்த திருப்புள்ளமங்கையில் விளங்குபவரும் ஆகிய இறைவனை நினைந்து வழிபடுபவர்களை …

016 திருப்புள்ளமங்கைத் திருஆலந்துறை – நட்டபாடை Read More »

015 திருநெய்த்தானம் – நட்டபாடை

திருநெய்த்தானம் – நட்டபாடை 152 மை ஆடிய கண்டன், மலை மகள் பாகம் அது உடையான்,கை ஆடிய கேடு இல் கரி உரி மூடிய ஒருவன்,செய் ஆடிய குவளை மலர் நயனத்தவளோடும்நெய் ஆடிய பெருமான், இடம் நெய்த்தானம் எனீரே! பொ-ரை: கருநிறம் அமைந்த கண்டத்தை உடையவனும், மலை மகளாகிய பார்வதியை இடப் பாகமாகக் கொண்டவனும், துதிக்கையோடு கூடியதாய்த் தன்னை எதிர்த்து வந்ததால் அழிவற்ற புகழ் பெற்ற யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த, தன்னொப்பார் இல்லாத் தலைவனுமாகிய …

015 திருநெய்த்தானம் – நட்டபாடை Read More »

014 திருக்கொடுங்குன்றம் – நட்டபாடை

திருக்கொடுங்குன்றம் – நட்டபாடை 141 வானில் பொலிவு எய்தும் மழை மேகம் கிழித்து ஓடி,கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம்ஆனில் பொலி ஐந்தும் அமர்ந்து ஆடி, உலகு ஏத்த,தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே. பொ-ரை: வளைந்த பிறைமதி வானின்கண் விளங்கும் மழை மேகங்களைக் கிழித்து ஓடிச் சென்று சேரும் குளிர்ந்த சாரலை உடைய கொடுங்குன்றம், பசுவிடம் விளங்கும் பால் நெய் தயிர் கோமயம் கோசலம் ஆகிய ஐந்து பொருள்களையும் மகிழ்ந்தாடி உலகம் போற்றத் …

014 திருக்கொடுங்குன்றம் – நட்டபாடை Read More »

013 திருவியலூர் – நட்டபாடை

திருவியலூர் – நட்டபாடை 130 குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ,பொரு வெங்கரி பட வென்று, அதன் உரிவை உடல் அணிவோன்,அரவும், அலைபுனலும், இளமதியும், நகுதலையும்,விரவும் சடை அடிகட்கு இடம் விரி நீர் வியலூரே. பொ-ரை: குரா மலரின் மணம் கமழ்வதும், இயற்கையிலேயே மணமுடையதுமான மென்மையான கூந்தலையுடைய உமையம்மை அஞ்ச, தன்னோடு பொருதற்கு வந்த சினவேழத்தைக் கொன்று, அதன் தோலைத் தன் திருமேனியில் போர்த்தவனும், அரவு, கங்கை, பிறை, வெண்தலை ஆகியவற்றை அணிந்த …

013 திருவியலூர் – நட்டபாடை Read More »

012 திருமுதுகுன்றம் – நட்டபாடை

திருமுதுகுன்றம் – நட்டபாடை 119 மத்தா வரை நிறுவி, கடல் கடைந்து, அவ் விடம் உண்டதொத்து ஆர்தரு மணி நீள் முடிச் சுடர் வண்ணனது இடம் ஆம்கொத்து ஆர் மலர், குளிர் சந்து, அகில், ஒளிர் குங்குமம், கொண்டுமுத்தாறு வந்து அடி வீழ்தரு முதுகுன்று அடைவோமே. பொ-ரை: மந்தர மலையை மத்தாக நட்டுக் கடலைக் கடைந்தபோது, கொடிது எனக் கூறப்பெறும் ஆலகால விடம் தோன்ற, அதனை உண்டவனும், பூங்கொத்துக்கள் சூடிய அழகிய நீண்ட சடை முடியினனும், எரி …

012 திருமுதுகுன்றம் – நட்டபாடை Read More »

011 திருவீழிமிழலை – நட்டபாடை

திருவீழிமிழலை – நட்டபாடை 108 சடை ஆர் புனல் உடையான், ஒரு சரி கோவணம் உடையான்,படை ஆர் மழு உடையான், பல பூதப்படை உடையான்,மடமான் விழி உமைமாது இடம் உடையான், எனை உடையான்,விடை ஆர் கொடி உடையான், இடம் வீழிமிழலையே. பொ-ரை: சடைமுடியில் கங்கையைத் தரித்தவனும், இடையினின்று சரிந்து நழுவும் ஒப்பற்ற கோவண ஆடையை அணிந்தவனும், மழுப் படையை உடையவனும், பலவகையான பூதங்களைப் படையாகக் கொண்டவனும், மடமைத் தன்மை பொருந்திய மான்விழி போன்ற விழிகளை உடைய உமையம்மையாகிய …

011 திருவீழிமிழலை – நட்டபாடை Read More »

010 திருஅண்ணாமலை – நட்டபாடை

திருஅண்ணாமலை – நட்டபாடை 97 உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,பெண் ஆகிய பெருமான், மலை திரு மா மணி திகழ,மண் ஆர்ந்தன அருவித்திரள் மழலை முழவு அதிரும்அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வணம் அறுமே. பொ-ரை: உண்ணாமுலை என்னும் திருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக எழுந்தருளியவரும், தம் இடப்பாகம் முழுவதும் பெண்ணாகியவருமாகிய சிவபிரானது மலை, அடித்து வரும் அழகிய மணிகள் சுடர்விட மண்ணை நோக்கி வருவனவாகிய அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல …

010 திருஅண்ணாமலை – நட்டபாடை Read More »

009 திருவேணுபுரம் – நட்டபாடை

திருவேணுபுரம் – நட்டபாடை 87 வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம்பெண்தான் மிக ஆனான், பிறைச் சென்னிப் பெருமான், ஊர்தண் தாமரை மலராள் உறை தவள நெடுமாடம்விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே. பொ-ரை: வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய பெண்ணாகிய உமையம்மை, தன்னிற் பிரியாதிருக்கத் தன் திருமேனியில் இடப்பாகத்தை அளித்து, அப்பாகம் முழுதும் பெண் வடிவானவனும், பிறையணிந்த திருமுடியை உடையவனும் ஆகிய பெருமானது ஊர், தாமரை மலரில் விளங்கும் திருமகள் வாழும் …

009 திருவேணுபுரம் – நட்டபாடை Read More »

008 திருஆவூர்ப் பசுபதீச்சுரம் – நட்டபாடை

திருஆவூர்ப் பசுபதீச்சுரம் – நட்டபாடை 76 “புண்ணியர், பூதியர், பூத நாதர், புடைபடுவார் தம் மனத்தார், திங்கள்கண்ணியர்!” என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த, இருந்தஊர் ஆம்விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி,எங்கும்பண் இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே! பொ-ரை: அன்புடை அடியவர் புண்ணியம் திரண்டனைய வடிவினர் எனவும், நிறைந்த செல்வம் உடையவர் எனவும், பூதகணங்களின் தலைவர் எனவும், அருகில் வந்து பரவுவாரின் மனத்தார் எனவும், பிறைமதிக் …

008 திருஆவூர்ப் பசுபதீச்சுரம் – நட்டபாடை Read More »

007 திருநள்ளாறும், திருஆலவாயும் – நட்டபாடை

திருநள்ளாறும், திருஆலவாயும் – நட்டபாடை 65 பாடக மெல் அடிப் பாவையோடும், படு பிணக்காடு இடம் பற்றிநின்று,நாடகம் ஆடும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல்சொல்லாய்சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்திவாழ்த்த,ஆடகமாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே? பொ-ரை: பாடகம் என்னும் அணிகலன் அணிந்த மென்மையான அடிகளை உடைய உமையம்மையோடு, பிணக்காடாகிய இடுகாட்டைப் பற்றி நின்று நாடகம் ஆடும் நள்ளாற்று நம் பெருமானே! நீகையில் வளையல் அணிந்த மகளிர் தம் துணைவர்களோடும் கூடி …

007 திருநள்ளாறும், திருஆலவாயும் – நட்டபாடை Read More »

006 திருமருகலும், திருச்செங்காட்டங்குடியும் – நட்டபாடை

திருமருகலும், திருச்செங்காட்டங்குடியும் – நட்டபாடை 55 அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ,மங்குல்மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடிஅதனுள்கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே? பொ-ரை: நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதும் நாவினராகிய அந்தணர்கள் நாள்தோறும் தன் திருவடிகளை வணங்க, வானமண்டலத்திலுள்ள சந்திரன் தவழ்ந்து செல்லுதற்கு இடமாய் உயர்ந்து விளங்கும் மாடவீதிகளை உடைய திருமருகலில் …

006 திருமருகலும், திருச்செங்காட்டங்குடியும் – நட்டபாடை Read More »

005 கீழைத்திருக்காட்டுப்பள்ளி – நட்டபாடை

கீழைத்திருக்காட்டுப்பள்ளி – நட்டபாடை 45 செய் அருகே புனல் பாய, ஓங்கிச் செங்கயல் பாய, சில                                                             மலர்த்தேன்-கை அருகே கனி வாழை ஈன்று கானல் எலாம் கமழ் காட்டுப்பள்ளி,பை அருகே அழல் வாய ஐவாய்ப் பாம்பு அணையான் பணைத்                                                             தோளி பாகம்மெய் அருகே உடையானை உள்கி, விண்டவர் ஏறுவர், மேல்                                                             உலகே. பொ-ரை: வயலின்கண் நீர் பாய, அதனால் களித்த செங்கயல்மீன்கள் துள்ள, அதனால் சில மலர்களிலிருந்து தேன் சிந்துதலானும், கைக்கெட்டும் தூரத்தில் வாழை மரங்கள் கனிகளை ஈன்று …

005 கீழைத்திருக்காட்டுப்பள்ளி – நட்டபாடை Read More »

004 திருப்புகலியும், திருவீழிமிழலையும் – நட்டபாடை

திருப்புகலியும், திருவீழிமிழலையும் – நட்டபாடை 34 மைம் மரு பூங்குழல் கற்றை துற்ற, வாள்நுதல் மான்விழிமங்கையோடும்,பொய்ம் மொழியா மறையோர்கள் ஏத்த, புகலி நிலாவியபுண்ணியனே!எம் இறையே! இமையாத முக்கண் ஈச! என் நேச! இது என்கொலசொல்லாய்மெய்ம்மொழி நால்மறையோர் மிழலை விண் இழி கோயில்விரும்பியதே? பொ-ரை: கற்றையாகச் செறிந்து கருமை மருவி வளர்ந்த அழகிய கூந்தலையும், ஒளி சேர்ந்த நுதலையும், மான் விழி போன்ற விழியையும் உடைய உமையம்மையோடு, பொய் பேசாத அந்தணர்கள் ஏத்தப் புகலியில் விளங்கும் புண்ணியம் திரண்டனைய …

004 திருப்புகலியும், திருவீழிமிழலையும் – நட்டபாடை Read More »

003 திருவலிதாயம் – நட்டபாடை

திருவலிதாயம் – நட்டபாடை 23 பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல் தூவி,ஒத்த சொல்லி, உலகத்தவர் தாம் தொழுது ஏத்த, உயர் சென்னிமத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம்,சித்தம் வைத்த அடியார் அவர்மேல் அடையா, மற்று இடர், நோயே. பொ-ரை: வலிதாயம் சித்தம் வைத்த அடியார்களை இடர் நோய் அடையா என வினை முடிபு கொள்க. சிவனடியார்கள், விளங்குகின்ற அழகிய மலர்களை அகங் கையில் ஏந்தி மந்திரத்தோடு நீர் வார்த்துப் பூசிக்க அவர்களோடு …

003 திருவலிதாயம் – நட்டபாடை Read More »

002 திருப்புகலூர் – நட்டபாடை

திருப்புகலூர் – நட்டபாடை 12 குறி கலந்த இசை பாடலினான், நசையால், இவ் உலகு எல்லாம்நெறி கலந்தது ஒரு நீர்மையனாய், எருது ஏறி, பலி பேணி,முறி கலந்தது ஒரு தோல் அரைமேல் உடையான் இடம் மொய்ம் மலரின்பொறி கலந்த பொழில் சூழ்ந்து, அயலே புயல் ஆரும் புகலூரே. பொ-ரை: சுரத்தானங்களைக் குறிக்கும் இசையமைதியோடு கூடிய பாடல்களைப் பாடுபவன். உயிர்கள் மீது கொண்ட பெருவிருப்பால் இவ்வுலகம் முழுவதும் வாழும் அவ்வுயிர்கள் தம்மை உணரும் நெறிகளை வகுத்து அவற்றுள் கலந்து …

002 திருப்புகலூர் – நட்டபாடை Read More »

Scroll to Top