You cannot copy content of this page

ஒன்பதாம் தந்திரம்

025 ஏட்டுப் பிரதியில் காணப்பட்ட பாடல்கள்

ஏட்டுப் பிரதியில் காணப்பட்ட பாடல்கள் அத்தாளத் தாள மதிலசை விற்கால்ஒத்தாட வோவாதி யாவேத மூடுறவைத்தாடி கூடல் தினமான மாகவேசித்தான நந்திதென் னம்பலத் தாடுமே. 48 ஆகஞ் சிவானந்த வைவொளி பூரிக்கிலேக வொளியா மிதய கமலத்தேதாகமுஞ் சோகமுஞ் சார்கலை யுன்னிலாக மனங்கசிந் தானந்த மாகுமே. 49 ஆணவ மூலத் தகார முதித்திடப்பேணி யுகாரங் கலாதி பிறிவிக்கத்தாணு மகாரஞ் சதாசிவ மாகவேஆணவ பாச மடர்தல் செய்யாவே. 50 உண்ண லுறங்க லுலாவ லுயிர் போதல்நண்ணல் நரக சுவர்க்கத்து நாட்டிடப்பண்ண லவன் …

025 ஏட்டுப் பிரதியில் காணப்பட்ட பாடல்கள் Read More »

024 உரை நூல்களில் காணப்பட்ட பாடல்கள்

உரை நூல்களில் காணப்பட்ட பாடல்கள் ஆறு சமய முதலாஞ் சமயங்கள்ஊற தெனவும் உணர்க உணர்பவர்வேற தறவுணர் வார் மெய்க் குருநந்திஆறி யமைபவர்க் கண்ணிக்குந் தானே. 1 உடலாங் குகையில் உணர்வாகும் பீடத்தடலார் சமாதி இதயத்த தாகநடமா டியகுகை நாடிய யோகிமிடையாகா வண்ணமே சாதிக்கு மெல்லவே. 2 நிற்றலிருத்தல் கிடத்தல் நடையோடல்பெற்ற வக்காலுந் திருவருள் பேராமல்சற்றியன் ஞானந்தந் தானந்தந் தங்கவேஉற்ற பிறப்பற் றொளிர் ஞான நிட்டையே. 3 நாயோட்டு மந்திரம் நான்மறை வேதம்நாயோட்டு மந்திரம் நாத னிருப்பிடம்நாயோட்டு மந்திரம் …

024 உரை நூல்களில் காணப்பட்ட பாடல்கள் Read More »

023 வாழ்த்து

வாழ்த்து வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம் வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள் வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே. 1 ஒன்பதாம் தந்திரம் முற்றிற்று.  

022 சர்வ வியாபி

சர்வ வியாபி ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓரொளி ஆயும் அறிவையும் மாயா உபாதியால் ஏய பரிய புரியும் தனதுஎய்தும் சாயும் தனது வியாபகம் தானே.  1 நான்அறிந்து அப்பொருள் நாடஇடம் இல்லை நான்அறிந்து அங்கே வழியுற விம்மிடும் ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் தான்அறிந்து எங்கும் தலைப்பட லாமே  2 கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து உடலிடை வாழ்வுகொண்டு உள்ளொளி நாடி உடலிடை வைகின்ற உள்ளுறு தேனைக் கடலின் மலிதிரைக் காணலும் ஆமே.  3 பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித் தெரிந்துட …

022 சர்வ வியாபி Read More »

021 தோத்திரம்

தோத்திரம் மாயனை நாடி மனநெடும் தேரேறிப் போயின நாடறி யாதே புலம்புவர் தேயமும் நாடும் திரிந்தெங்கள் செல்வனைக் காயம்மின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே.  1 மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல் இன்னிசை பாட இருந்தவர் ஆரெனில் முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப் பன்னினர் என்றே பாடறி வீரே.  2 முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றை எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை அத்தனைக் காணாது அரற்றுகின் றேனையோர் பித்தன் இவனென்று பேசுகின் றாரே.  3 புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி புகுந்துநின் றான்எங்கள் …

021 தோத்திரம் Read More »

020 அணைந்தோர் தன்மை

அணைந்தோர் தன்மை மலமில்லை மாசில்லை மானாபி மானம் குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே பலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே.  1 ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம் கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன் அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன் செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே.  2 ஆலைக் கரும்பும் அமுதும்அக் காரமும் சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப் பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொரு கோலப்பெண் ணாட்குக் குறை யொன்றும் இல்லையே.  3 ஆராலும் என்னை அமட்டஒண் …

020 அணைந்தோர் தன்மை Read More »

019 வரையுரை மாட்சி

வரையுரை மாட்சி தான்வரைவு அற்றபின் ஆரை வரைவது தான்அவ னானபின் ஆரை நினைவது காமனை வென்றகண்ணாரை உகப்பது தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே.  1 உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள் கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப் புரையற்று இருந்தான் புரிசடை யோனே.  2 மனமாயை மாயைஇம் மாயை மயக்கம் மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா தனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே.  3

018 மோன சமாதி

மோன சமாதி நின்றார் இருந்தார் கிடந்தார் எனஇல்லை சென்றார்தம் சித்தம் மோன சமாதியாம் மன்றுஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டு சென்றாங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே.  1 காட்டும் குறியும் கடந்த வக் காரணம் ஏட்டின் புறத்தில் எழுதிவைத்து என்பயன் கூட்டும் குருநந்தி கூட்டிடின் அல்லது ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே. 2 உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும் உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை உணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம் உணர்வுடை யார்கள் உணர்ந்து கண் டாரே.  3 மறப்பது வாய்நின்ற …

018 மோன சமாதி Read More »

017 சூனிய சம்பாஷணை

சூனிய சம்பாஷணை காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய் ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம் ஏய பெருமான்இருந்து பொருகின்ற மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.  1 தூறு படர்ந்து கிடந்தது தூநெறி மாறிக் கிடக்கும் வகையறி வாரில்லை மாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்கு ஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே.  2 ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில் சாறுபடுவன நான்கு பனையுள ஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனை ஏறலுற் றேன்கடல் ஏழுங்கண் டேனே.  3 வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது புழுதியைத் தோண்டினேன் பூசணி …

017 சூனிய சம்பாஷணை Read More »

016 முத்தி பேதம், கரும நிருவாணம்

முத்தி பேதம், கரும நிருவாணம் ஓதிய முத்தியடைவே உயிர்பர பேத மில் அச்சிவம் எய்தும் துரியமோடு ஆதி சொரூபம் சொரூபத்த தாகவே ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே.  1 பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள் கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல் சுற்றற் றவர்சுற்றி நின்றஎன் சோதியைப் பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.  2

005 தூல பஞ்சாக்கரம்

தூல பஞ்சாக்கரம் ஐம்பது எழுத்தே அனைத்துவே தங்களும் ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும் ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின் ஐம்பது எழுத்தே அஞ்செழுத் தாமே.  1 அகார முதலாக ஐம்பத்தொன்று ஆகி உகார முதலாக ஓங்கி உதித்து மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந்து ஏறி நகார முதலாகும் நந்திதன் நாமமே.  2 அகராதி ஈரெண் கலந்த பரையும் உகராதி தன்சத்தி உள்ளொளி ஈசன் சிகராதி தான்சிவ வேதமே கோணம் நகராதி தான்மூலமந்திரம் நண்ணுமே.  3 வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி ஆய இலிங்கம் …

005 தூல பஞ்சாக்கரம் Read More »

015 சிவ சொரூப தரிசனம்

சிவ சொரூப தரிசனம் ஓதும் மயிர்க்கால் தோறும் அமு தூறிய பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம் ஆதி சொரூபங்கள் மூன்றுஅகன்று அப்பாலை வேதம் ஓதும் சொரூபிதன் மேன்மையே.  1 உணர்வும் அவனே உயிரும் அவனே புணரும் அவனே புலவி அவனே இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.  2 துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரு முன்னி அவர்தம் குறையை முடித்திடும் மன்னிய கேள்வி மறையவன் மாதவன் சென்னியுள் நின்றதோர் தேற்றத்தன் ஆமே.  3 மின்னுற்ற சிந்தை விழித்தேன் …

015 சிவ சொரூப தரிசனம் Read More »

014 சிவ தரிசனம்

சிவ தரிசனம் சிந்தையது என்னச் சிவனென்ன வேறில்லை சிந்தையின் உள்ளே சிவனும் வெளிப்படும் சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச் சிந்தையின் உள்ளே சிவனிருந்தானே.  1 வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள் நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை ஆக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.  2 பரனாய்ப் பராபர னாகிஅப் பால்சென்று உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய் தரனாய்த் தனாதென வாறுஅறி வொண்ணா அரனாய் உலகில் அருள்புரிந் தானே.  3   

013 ஊழ்

ஊழ் செற்றிலென் சீவிலென் செஞ்சாந்து அணியிலென் மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென் வித்தக நந்தி விதிவழி யல்லது தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.  1 தான்முன்னம் செய்த விதிவழி தானல்லால் வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று நான்முன்னம் செய்ததே நன்னில மானதே.  2 ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப் பேறிட்டுஎன் உள்ளம் பிரியகி லாவே.  3 வான்நின்று இடிக்கில்என் மாகடல் பொங்கிலென் கான்நின்ற செந்தீக் …

013 ஊழ் Read More »

012 சொரூப உதயம்

சொரூப உதயம் பரம குரவன் பரம்எங்கு மாகித் திரமுற எங்கணும் சேர்ந்துஒழி வற்று நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம் அரிய துரியத்து அணைந்துநின் றானே.  1 குலைக்கின்ற நீரின் குவலய நீரும் அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாசம் நிலத்திடை வானிடை நீண்டகன் றானை வரைந்து வலம்செயு மாறுஅறி யேனே.  2 அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள் எங்குநின் றாரும் இறைவன் என்று ஏத்துவர் தங்கிநின் றான்தனிநாயகன் எம்இறை பொங்கிநின் றான்புவ னாபதி தானே.  3 சமயச் சுவடும் தனையறி யாமல் கமையற்ற …

012 சொரூப உதயம் Read More »

011 சத்திய ஞானானந்தம்

சத்திய ஞானோதயம் எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே இப்பாழும் இன்னாவாறு என்பதிலா இன்பத்துத் தற்பரஞா னானந்தம் தானது வாகுமே.  1 தொம்பதம் தற்பதஞ் சொன்ன துரியம்போல் நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும் அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச் செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.  2 மன்னும் சத்தியாதி மணியொளி மாசோபை அன்னதோடு ஒப்பம் இடல்ஒன்றா மாறது இன்னிய உற்பலம் ஒண்சீர் நிறமணம் பன்னிய சோபை பகர்ஆறும் ஆனதே.  3 சத்தி சிவன்பர ஞானமும் சாற்றுங்கால் உய்த்த …

011 சத்திய ஞானானந்தம் Read More »

010 ஞானோதயம்

ஞானோதயம் மனசந் தியில்கண்ட மன்நன வாகும் கனவுற ஆனந்தம் காண்டல் அதனை வினவுற ஆனந்தம் மீதொழிவுஎன்ப இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே.  1 கரியட்ட கையன் கபாலம்கை யேந்தி எரியும் இளம்பிறை சூடும்எம் மானை அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால் கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே.  2 மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன் தக்கார் உரைத்த தவநெறியே சென்று புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை நக்கார் சுழல்வழி நாடுமின் நீரே.  3 விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி விளக்கினுக் குள்ளே …

010 ஞானோதயம் Read More »

009 ஆகாசப் பேறு

ஆகாசப் பேறு உள்ளத்துள் ஓம்என்ற ஈசன் ஒருவனை உள்ளத்து ளேயங்கி யாய ஒருவனை உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை உள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே.  1 பெருநில மாய் அண்ட மாய்அண்டத்து அப்பால் குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன் பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன் அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே.  2 அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன் பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது கொண்ட குறியைக் குலைத்தது தானே.  3 பயனறு கன்னியர் போகத்தின் உள்ளே …

009 ஆகாசப் பேறு Read More »

008 திருக்கூத்து தரிசனம்

திருக்கூத்து தரிசனம் எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம் எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும் தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே.  1 சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச் சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப் பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை அற்புதக் கூத்தனை யார்அறி வாரே.  2 சிவானந்தக் கூத்து தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல் தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர் ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு ஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே.  1 ஆனந்தம் ஆடரங்கு …

008 திருக்கூத்து தரிசனம் Read More »

007 அதிசூக்கும பஞ்சாக்கம்

அதிசூக்கும பஞ்சாக்கம் சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி அவாயம் அறவே அடிமைய தாக்கிச் சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே.  1 செஞ்சுடர் மண்டலத்து ஊடுசென்று அப்புறம் அஞ்சண வும்முறை ஏறிவழிக் கொண்டு துஞ்சும் அவன்சொன்ன காலத்து இறைவனை நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே.  2 அங்கமும் ஆகம வேதமது ஓதினும் எங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பது சங்கைகெட்டு அவ்எழுத்து ஒன்றையும் சாதித்தால் அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே.  3 பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே விழித்துஅங்கு …

007 அதிசூக்கும பஞ்சாக்கம் Read More »

006 சூக்கும பஞ்சாகாரம்

சூக்கும பஞ்சாகாரம் எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த் தெளிய ஒதிச்சிவாயநம என்னும் குளிகை யிட்டுப் பொன் னாக்குவன் கூட்டையே.  1 சிவன்சத்தி சீவன் செறுமல மாயை அவஞ்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச் சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர அவம்சேர்த்த பாசம் அணுககி லாவே.  2 சிவன்அரு ளாய சிவன்திரு நாமம் சிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயை சிவன்முத லாகச் சிறந்து நிரோதம் பவமது அகன்று பரசிவன் ஆமே.  3 ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ் …

006 சூக்கும பஞ்சாகாரம் Read More »

004 ஓளி

ஒளி ஒளியை அறியில் உருவும் ஒளியும் ஒளியும் உருவம் அறியில் உருவாம் ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும் உருக உடனிருந் தானே.  1 புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும் அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும் பகல்ஒளி செய்ததும் அத்தா மரையிலே இகல்ஒளி செய்துஎம் பிரான்இருந் தானே.  2 விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன் துளங்கொளி பெற்றன சோதி யருள வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு களங்கொளி செய்து கலந்து நின்றானே.  3 இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி துளங்கொளி ஞாயிறும் …

004 ஓளி Read More »

003 பிரணவ சமாதி

பிரணவ சமாதி தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரை பாலித்த சூக்கும மேலைப் சொரூபப்பெண் ஆலித்த முத்திரை ஆங்கதிற்காரணம் மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.  1 ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.  2 ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள் ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம் ஓங்கார தீதத்து உயிர்மூன்றும் உற்றன ஓங்கார சீவ பரசிவ ரூபமே.  3 வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும் அருக்கம் சராசரம் …

003 பிரணவ சமாதி Read More »

Scroll to Top