You cannot copy content of this page

சைவம்

சிவபெருமானை வழிபடுங்கள்…!!

சிவனை வணங்கும் முறை : 🔥 சிவாலயங்களில் இறைவனை வணங்கும் பொழுது பலிபீடத்திற்கு அருகில் நின்றுதான் வணங்க வேண்டும். 🔥 சன்னிதி கிழக்கு நோக்கி இருந்தால் பலிபீடத்திற்கு தென்கிழக்கு மூலையில் நின்று வணங்க வேண்டும். 🔥 தெற்கு மற்றும் மேற்கு நோக்கிய சன்னிதி இருந்தால் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் நின்று வணங்க வேண்டும். 🔥 சன்னிதி வடக்கு நோக்கி இருந்தால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் நின்று வணங்க வேண்டும். 🔥 சிவாலயங்களில் கொடிமரத்திற்கு அருகில் நின்று மூன்று …

சிவபெருமானை வழிபடுங்கள்…!! Read More »

திருமணச் சடங்குகள்

‘திரு’ என்பது தெய்வத்தன்மை எனவும், ‘மணம்’ என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, ‘திருமணம்’ என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம். தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம் மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்யதாரணம்” எனக் கூறுவர். …

திருமணச் சடங்குகள் Read More »

மகா சிவராத்திரி மகிமை!

மகா சிவராத்திரி மகிமை! ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமானுக்குரிய விரதங்களில் தலையாயது சிவராத்திரி விரதம். எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மைக் கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர்என்று சிவபெருமான் கூறியதாக, சிவராத்திரி புராணத்தைச் சொல்லும் ‘வரதபண்டிதம்’ என்னும் நூல் கூறுகிறது. ‘எள்ளளவும் அன்பு இல்லாதவர்கள் ஆனாலும் சரி; அன்பு கொண்டவர்களாக இருந்தாலும் சரி; சிவராத்திரி அன்று சிவபெருமானைத் தரிசித்தவர், விரதம் இருந்தவர், வழிபாடு செய்தவர் ஆகியோருக்கு நற்கதி கிடைக்கும்’ என்பதே …

மகா சிவராத்திரி மகிமை! Read More »

வில்வம்

சிவனுடைய அம்சமாக கருதப்படுவது வில்வ மரம். மூன்று, ஐந்து இலை அடுக்குகளாக வளரும் இயல்பைக் கொண்டது. வில்வத்தில் 21 வகைகள் உள்ளதாகவும், அவற்றில் மகா வில்வமும், அகண்ட வில்வமுமே பூஜைகளில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான சிவ ஆலயங்களில் தல விருட்சமாக இருக்கும் பெருமைக்கு உரியது வில்வம். கூவிளம், கூவிளை, மாதுரம் உள்ளி்ட்ட பெயர்களிலும் வில்வம் அழைக்கப்படுகிறது. இதன் இலை, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை எல்லாமே மருத்துவத்தில் பயன்படுகின்றன. வில்வத்தின் காற்று பட்டாலே சுவாசக் கோளாறு போன்ற பிரச்சினைகளும் …

வில்வம் Read More »

சிவ தீக்கை

சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் வாழ்க்கைச் சுற்றில் திருமணத்திற்கு முந்தைய இளையோர் பருவத்தில் நிகழ்த்தப் பெற வேண்டிய வாழ்வியல் கரணங்களில் ஒன்று தீக்கைப் பெறுதல் ஆகும். தீக்கைப் பெறும் கரணம் சைவச் சிறுவர்களுக்கும் சிறுமியர்களுக்கும் நான்கு அகவையில் இருந்து ஏழு அகவைக்கு உள்ளாக நிகழ்த்தப் பெறும். “தீ” என்பது தீய்த்தலையும் “கை” என்பது செலுத்துதலையும் குறிக்கும். எனவே தீக்கை பெறுதல் என்பது தீக்கை பெறுபவரின் அறியாமையைத் தீக்குள் இட்டுத் தீய்த்து, இறைவனின் திருவருளைப் பெறும் திருநெறிக்குள் தீக்கைப் பெறுபவரைச் …

சிவ தீக்கை Read More »

274 பாடல் பெற்ற சிவ ஸ்தலங்கள்

274 PADAL PETRA SIVA ALAYAM தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான  திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள். அந்த வரிசையில் மொத்தம் 274 சிவ ஸ்தலங்கள் உள்ளன. அவைகளில் பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், மற்ற கோயில்கள் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் சில மற்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ளன. தமிழ்நாட்டில் …

274 பாடல் பெற்ற சிவ ஸ்தலங்கள் Read More »

20 வகை பிரதோஷ விரத வழிபாடு

20 வகை பிரதோஷ விரத வழிபாடு தினசரி பிரதோஷம் :தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும்.இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம். பட்சப் பிரதோஷம் :அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” …

20 வகை பிரதோஷ விரத வழிபாடு Read More »

சிவ பூஜை

அபிஷேகம் அபிஷேக தீர்த்தத்தில் போடுவதற்கு உகந்த திரவியங்கள் : பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலியன. அபிஷேகப் பொருட்களின் வரிசைக் கிரமம் : எண்ணெய், பஞ்சகவ்யம், மாவு, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன், கரும்பின் சாறு, (பழங்கள்), பழ ரசங்கள், இளநீர், அன்னாபிஷேகம், சந்தனம், ஸ்நபனம் அபிஷேக திரவியங்கள் தரும் பலன் : சுத்த நீர் – விருப்பங்கள் நிறைவேறும், மணம் உள்ள தைலம் – சுகம் தரும், பஞ்சகவ்யம் – பாவத்தைப் …

சிவ பூஜை Read More »

தர்ப்பணம் செய்யும் ஸ்தலங்கள் !

தர்ப்பணம் செய்யும் ஸ்தலங்கள் ! முன்னோர் சாபம் தீர்த்து, அவர்களது பரிபூரணமான ஆசியால் நம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெருகச் செய்யப்படுவதே ‘நீத்தார் கடன்’. அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே நீத்தார் கடன் செய்யலாம். தெய்வத் தலங்களில் நீத்தார் கடன் செய்வதன் மகிமையை நமது ஞான நூல்கள் விவரிக்கின்றன. அவற்றுள் சில: காசி: கங்கைக் கரையிலுள்ள புனிதமான தலம் காசி. இங்குள்ள விஸ்வநாதர் ஆலயமும், விசாலாட்சி ஆலயமும், அன்னபூரணி ஆலயமும் மிகவும் போற்றப்படுபவை ஆகும். காசியில் தர்ப்பணம் செய்வதை …

தர்ப்பணம் செய்யும் ஸ்தலங்கள் ! Read More »

நந்தி எம் பெருமான்

நந்தி தேவர் திட்பம் வாய்ந்தவர். சாந்தமான குணம் படைத்தவர். தர்மத்தின் வடிவமாய்த் திகழ்பவர். ஒப்புவமை இல்லாத பெருமை நிறைந்தவர். இந்திராதி தேவர்களாலும் முனிவர்களாலும் போற்றி துதிக்கப்படுபவர். `சிவயநம’ எனும் ஐந்தெழுத்தின் உருவத்தைக் கொண்டவர். அதாவது, பஞ்சாட்சரத்தின் வடிவமானவர். ஒப்பில்லாத நான்கு வேதங்களையும் நான்கு பாதங்களாகக் கொண்டவர். ஊழிக்காலத்தில் இறைவனுக்கு வாகனமாக இருந்து அவரைத் தாங்கும் பேறு பெற்றவர். நிரந்தரமான இடத்தை உடையவர். வில்லாளிகளில் மேன்மை உடையவர். பிறரால் வெற்றிபெற முடியாதவர். எக்காலத்திலும் சிவபெருமானை வணங்கிய தோற்றத்துடனும், அவரது …

நந்தி எம் பெருமான் Read More »

சைவ சமயம் அறிவோம் !

சைவ சமயம் அறிவோம் ! சைவ சமயம் என்றால் என்ன ? சிவபெருமானை முழமுதற் கடவுளாக கொண்டு வழிப்படும் சமயம் .(சிவ சம்பந்த முடையது சைவம்). சிவபெருமான் எப்படிபட்டவர் ? சிவபெருமான் என்றும் உள்ளவர் ,எங்கும் நிறைந்தவர் ,எல்லாம் அறிபவர் , எல்லாம் வல்லவர் . சிவபெருமான் உயிர்களுக்காக செய்யும் தொழில்கள் யாவை ? 1.படைத்தல் –மாயையிலிருந்து உடல், கருவிகள், உலகம் ,நுகர்ச்சிபொருள்களைப் படைத்து உயிர்களுக்குக் கொடுத்தல்.2.காத்தல் –படைக்கபட்டதை உயிர்கள் அனுபவிக்க ஒருகால எல்லைவரைகாத்து நிறுத்தி வைத்தல்.3.அழித்தல் …

சைவ சமயம் அறிவோம் ! Read More »

ஐம்பெரும் புராணம்

ஐம்பெரும் புராணம் குரு வணக்கம், விநாயகர் துதி, முருகர் துதி, அம்பாள் துதி, பன்னிரு திருமுறைகள், வாழ்த்து என்று வரிசையாக இறைவன் முன்னர் பாடுவது மரபு. இருப்பினும் நேரம் சுருக்கமாக இருக்கும் காலத்தில், ஐம்பெரும் புராணம் எனும் பஞ்ச புராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடல் பாடுவது சைவ மரபு. அவ்வாறாக, இறைவன் திருமுன் நின்று கொண்டு பஞ்ச புராண பாடல்களைப் பாடுங்கள். நீங்கள் உங்கள் சொந்த குரலிலே பாடுவதை இறைவன் ஒரு குழந்தை பாடுவதைப் போல ரசித்துக் …

ஐம்பெரும் புராணம் Read More »

சைவ சமயக் கோட்பாடுகள்

சைவ சமயக் கோட்பாடுகள் தமிழர் சமயம் என்பது எது? சைவ சமயம் சைவ சமயம் என்றால் என்ன? உமை, விநாயகர், முருகன் ஆகிய தெய்வங்களைப் பொதுவாகவும் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகவும் கொண்டு சிவனை வழிபடும் நெறி. காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? ந-ம-சி-வ-ய அல்லது சி-வ-ய-ந-ம சைவ சின்னங்கள்: 1 திருநீறு2 உருத்திராக்கம்3 திருவைந்தெழுத்து சிவ மந்திரம்.நமசிவய, சிவயநம ! திருநீறு எதனைக் குறிக்கும்? உலகத்தில் இறைவனுடையத் திருவருளே நிலையானது, மற்றது நிலை இல்லாதது …

சைவ சமயக் கோட்பாடுகள் Read More »

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டுமா ?

செல்வம் செழிக்க சிவபெருமானை வணங்குங்கள். சகல அண்ட புவனங்களையும் தன்னுள் கொண்டு காத்தருளும், தனக்கு நிகரற்ற தெய்வம் சிவபெருமானின் ஆணையின் கீழ், அனைத்துலகும் இயங்கி வருகிறது. எல்லா உயிர்க்குத் தேவையான வற்றையும், பொருளையும், இன்பத்தையும் தன் அளப்பரிய கருணையினால் தக்க சமயத்தில் கொடுத்து அருள எல்லா ஆலயங்களிலும் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் சிவம் நம்மை உய்விக்கும் தெய்வம். ஆணவத்தை வேரறுத்து நிகரற்ற பேரின்பத்தை எப்போதும் வழங்கும் தன்மையுடைய ஒரே கருணை தெய்வம் சிவபெருமான். திக்குத் தெரியாமல் தவித்துப் …

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டுமா ? Read More »

சிவாலயங்கள் அறிவோம்.

சிவாலயங்கள் அறிவோம். சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் பெருமானின் பாடல்களில் ஊர்களின் பெயர்களைத் தொகுத்தே பாடல்களைக் காணலாம். ஆறாம் திருமுறையில், முழுப் பாடலுமே திருத்தலங்களின் பெயர்களைத் தொடுத்தே திருத்தல தாண்டகம் என்று பதிகமாக பாடியுள்ளார். அந்தப் பாடல் இங்கே: ஆறாம் திருமுறை. திருநாவுக்கரசர் அருளிய திருத்தல திருத்தாண்டகம்தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர்கொல்லிக் குளிருறைப் பள்ளி கோவல் வீரட்டங் கோகரணங் கோடிகாவும்முல்லைப் புறவம் முருகன் பூண்டி முழையூர் பழையாறை சத்தி முற்றம்கல்லில் திகழ் சீரார் …

சிவாலயங்கள் அறிவோம். Read More »

சோமவார விரதம்

விரதங்களில் தலையாயது சோமவார விரதமாகும். திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாளாகும். எனவே அன்றைய நாள் சோமவார விரதம் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தார். அதனால் அவர் சிவனுக்கு மிகவும் பிடித்தவராகி சிவனின் சிரசிலேயே இடம்பெற்றார். சோமவார விரத நாளில் காலையில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி விரதத்தைத் தொடங்கலாம். ஆண்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். திருமணமாகாதவர்கள் நல்ல கணவன் வேண்டியும், திருமணமானவர்கள் கணவன் நோயில்லாமல் நீண்ட காலம் வாழவும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். மணப்பேறு, …

சோமவார விரதம் Read More »

வினை அறுப்பவன் வேத நாயகன்

வினைஅறுப்பவன் வேத நாயகன் (திருமுறைப் பாடல்கள்) வாழ்க்கையை நல்வழிப்படுத்தி ஆன்மாவை உயர்னிலையடையச் செய்வதற்கு மதங்கள் உதவி செய்துள்ளன. மேலும், மதங்கள், அந்தந்த மக்கள் பேசுகிற மொழிகளையும் வளப்படுத்தி அம்மொழிகளில் சிறந்த இலக்கியங்களையும் அளித்திருக்கின்றன. சைவம், வைணவம், சமணம், பௌத்தம், கிருத்துவம், இசுலாம் ஆகிய மதங்கள் தமிழ் மொழியை வளப்படுத்தி அதில் சிறந்த இலக்கியங்களைக் கொடுத்திருக்கின்றன. திருவாசகத்தில் அமைந்துள்ள ஐம்பத்தொரு பதிகங்கள் மனித பிறவியை உயர்த்துவதாகவே அமைந்துள்ளது. அதில் சிவபுராணம் கயிலாயம் போல் உயர்ந்திருக்கிறது. சீவனான இந்த ஜீவாத்மாக்கள் …

வினை அறுப்பவன் வேத நாயகன் Read More »

ஸ்ரீ ருத்ர ஸூக்தம்

ஸ்ரீ ருத்ர ஸூக்தம் (ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்ய இயலாதபோது மட்டும், முதலாவதாகச் சொல்லவேண்டியது) பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர்வ்ருணக்து பரி-த்வேஷஸ்ய துர்மதிரகாயோ: அவ-ஸ்திராமகவத்ப்யஸ்- தனுஷ்வ மீட்வஸ்தோகாய தனயாய ம்ருடய ஸ்துஹிஸ்ருதம் கர்தஸதம் யுவாநம் ம்ருகந்தபீம-முபஹத்னு-முக்ரம் ம்ருடாஜரித்ரே ருத்ர ஸ்தவாநோ அந்யந்தேஅஸ்மந்-நிவபந்து ஸேனா: மீடுஷ்டமஸிவதம ஸிவோ ந: ஸுமனா பவபரமே வ்ருக்ஷ ஆயுதம் நிதாய க்ருத்திம் வஸான ஆசர பிநாகம்பிப்ரதாகஹி அர்ஹன் பிபர்ஷி ஸாயாகானி தன்வ அர்ஹந்நிஷ்கம் யஜதம் விஸ்வரூபம் அர்ஹந் நிதந் தயஸே விஸ்வமப்புவம் ந வா …

ஸ்ரீ ருத்ர ஸூக்தம் Read More »

சிவ தத்துவங்களும் உருவங்களும்

சிவ தத்துவங்களும் உருவங்களும் இறை, உயிர், தளை என்று சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள்களுள் இறை ஏனையவற்றைக் காட்டிலும் பேராற்றல் வாய்ந்தது. தன்னுரிமை உடையது. உண்மை இயல்பு, பொது இயல்பு என்னும் இரண்டு இயல்புகளை உடையது. இறை தன்னையே நோக்கி நிற்கும் நிலையில் உண்மை இயல்புடையதாகும். உலகை நோக்கி நிற்கும் நிலையில் பொது இயல்பு உடையதாகும். உண்மை இயல்பில் சிவம் என்று கூறப்பெறும். பொது இயல்பில் தலைவன் (பதி) என்று கூறப்பெறும். உண்மை இயல்புஉண்மை இயல்பில் சிவம் பரம் …

சிவ தத்துவங்களும் உருவங்களும் Read More »

கருப்பணசாமி வழிபாடு

கருப்பணசாமி கருப்பணசாமி – ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு) இவர் பைரவர் அம்சம்; கிராமிய வழக்கில் கருப்பர் – கருப்பணன் – கருப்பண்ணன் – முனியாண்டி – சடையாண்டி – கருப்பணசாமி எனப் பலபெயர் பெறுவர். ஒரு முகமும் – இரண்டு கரங்களுமே உடையவர். வலக்கரத்தில் – கத்தி அல்லது அரிவாள் கொண்டிருப்பார். இடக்கரத்தில் – தண்டம் அல்லது கதை உமையவராக இருப்பார். முறுக்கு மீசையும் – சடாமுடியும் உடையவர். காவி உடை அணியும் வழக்குடையவர். இவர் அருகில் …

கருப்பணசாமி வழிபாடு Read More »

நித்தியகருமவிதி

உ கணபதி துணை. அநுட்டானவிதி: ஆறுமுகநாவலரவர்கள்செய்தது. நித்தியகருமவிதி சைவ சமய மரபிலே பிறந்தவர் எல்லாரும், எழாம் வயசிலாவது, ஒன்பதாம் வயசிலாவது, சமயதீக்ஷை பெற்று,அநுட்டானஞ் செவ்வையாகப் பழகிக்கொண்டு மரணபரியந்தம் விடாது செய்க. நாடோறுஞ் சூரியோதயத்துக்கு முன்னே நித்திரை விட்டெழுந்து கிழக்கு முகமாகவேனும் வடக்குமுகமாவேனும் இருந்து,“சிவ சிவ” என்று நெற்றியில் விபூதி தரித்து, “ஓம் கணபதயே நம:” என்று குட்டி, “ஓம் குருப்பியோ நம:” என்று கும்பிட்டு,சிவபெருமானை இருதயத்திலே தியானித்து ஒரு தோத்திரமாவது சொல்லிக்கொள்க. அதன்பின் எழுந்து புறத்தேபோய், மலசலமோசனஞ் …

நித்தியகருமவிதி Read More »

தீராத நோய்கள் முற்றிலும் நீங்க திருத்தாண்டகம்

தீராத நோய்கள் முற்றிலும் நீங்க ஓத வேண்டிய பதிகம்6.99 திருப்புகலூர் – திருத்தாண்டகம்௿திருச்சிற்றம்பலம் எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ௿எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற்௿கண்ணிலேன் மற்றோர் களைக ணில்லேன்௿கழலடியே கைதொழுது காணி னல்லால்௿ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்௿ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்௿புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்௿பூம்புகலூர் மேவிய புண்ணி யனே. 6.99.1 அங்கமே பூண்டாய் அனலா டினாய்௿ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்௿பங்கமொன் றில்லாத படர்ச டையினாய்௿பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்௿சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்௿சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்௿சிங்கமே …

தீராத நோய்கள் முற்றிலும் நீங்க திருத்தாண்டகம் Read More »

பஞ்சாட்சரம் மூன்று விதம்

“சிவ சிவ என்றிடத் தீவினை மாலும் சிவ சிவ என்கிலார் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தேவருமாவர் சிவ சிவ என்னச் சிவ கதி தானே” திருமந்திரம் பஞ்சாட்சரம் மூன்று விதம் மூன்று வித பஞ்சாட்சரம்ஸ்தூல பஞ்சாட்சரம் – நமசிவய சூட்சும பஞ்சாட்சரம் – சிவயநம காரணபஞ்சாட்சரம் – சிவ சிவ ஸ்தூல பஞ்சாட்சரம் – நமசிவய நமசிவய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று உச்சரிப்பதே மரபாகும். சித்தர்கள் இம் …

பஞ்சாட்சரம் மூன்று விதம் Read More »

Scroll to Top