064 அமைச்சு

அமைச்சு பால்: பொருட்பால். இயல்: அமைச்சியல். அதிகாரம்: அமைச்சு. குறள் 631: கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்டது அமைச்சு. மணக்குடவர் உரை:செய்தற்கு அரியவினையும், அதற்காங்கருவியும், அதற்காங்காலமும், அதனையிடையூறு படாமற் செய்து முடித்தலுமாகிய இந்நான்கும் மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான். செய்தற்கு அரியவினையாவது மறுமண்டலங்கோடல்; கருவியாவது யானை- குதிரை முதலிய படை: காலமாவது நீரும் நிழலுமுள்ள காலம்; செய்தலாவது மடியின்றிச் செய்தல். பரிமேலழகர் உரை:கருவியும் – வினை செய்யுங்கால் அதற்கு வேண்டும் கருவிகளும்; காலமும் – அதற்கு ஏற்ற காலமும்; …

064 அமைச்சு Read More »