008 அன்புடைமை

அன்புடைமைபால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை. குறள் 71: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும். மணக்குடவர் உரை:அன்பினை யடைக்குந்தாழுமுளதோ? அன்புடையார் மாட்டு உளதாகிய புல்லிய கண்ணின் நீர்தானே ஆரவாரத்தைத் தரும். பரிமேலழகர் உரை:அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ – அன்பிற்கும் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உளதோ?; ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் -தம்மால் அன்பு செய்யப்பட்டாரது துன்பம் கண்டுழி அன்புடையார் கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள்நின்ற அன்பினை எல்லாரும் அறியத்தூற்றும் …

008 அன்புடைமை Read More »