025 அருளுடைமை

அருளுடைமை பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: அருளுடைமை. குறள் 241: அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணும் உள. மணக்குடவர் உரை:செல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடைமையாகிய செல்வமாம்; பொருட்செல்வமானது கீழாயினோர்மாட்டும் உளவாதலால். இஃது அருள்நிலை கூறிற்று. பரிமேலழகர் உரை:செல்வத்துள் செல்வம் அருட்செல்வம் – செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான்வரும் செல்வம், பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள – அஃது ஒழிந்த பொருளான் வரும்செல்வங்கள் இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான். ( அருளான் வரும் செல்வமாவது, …

025 அருளுடைமை Read More »