ஒளவையார் அருளிய ஆத்திசூடி

ஒளவையார் அருளிய ஆத்திசூடி மூலமும் உரையும் 1 அறஞ்செய விரும்பு. (பதவுரை) அறம் – தருமத்தை, செய – செய்வதற்கு, விரும்பு – நீ ஆசை கொள்ளு. (பொழிப்புரை) நீ தருமம் செய்ய ஆசைப்படு. 2 ஆறுவது சினம். (பதவுரை) ஆறுவது-தணியவேண்டுவது, சினம்-கோபமாம். (பொழிப்புரை) கோபம் தணியத் தகுவதாம். 3 இயல்வது கரவேல். (பதவுரை) இயல்வது-கொடுக்கக்கூடிய பொருளை, கரவேல்- (இரப்பவர்களுக்கு) ஒளியாதே, (பொழிப்புரை) கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு. 4 ஈவது விலக்கேல். (பதவுரை) …

ஒளவையார் அருளிய ஆத்திசூடி Read More »