039 இறைமாட்சி

இறைமாட்சி பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: இறைமாட்சி. குறள் 381: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசருள் ஏறு. மணக்குடவர் உரை:படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணுமென்னும் ஆறுபொருளினையும் உடையவன் அரசருள் ஏறுபோல்வன். ஈண்டுக் குடியுள் நாடு அடங்கிற்று. இஃது அரசனுக்கு உண்டாக்குவன கூறிற்று. பரிமேலழகர் உரை:படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் – படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன், அரசருள் …

039 இறைமாட்சி Read More »