049 காலமறிதல்

காலமறிதல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: காலமறிதல். குறள் 481: பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது. மணக்குடவர் உரை:இராப்பொழுது வெல்லுங் கூகையைக் காக்கை பகற்பொழுது வெல்லும். ஆதலான் மாறுபாட்டை வெல்லும் அரசர்க்குக் காலம் வேண்டும் இது காலமறிதல் வேண்டும் என்றது. பரிமேலழகர் உரை:கூகையைக் காக்கை பகல் வெல்லும் – தன்னின் வலிதாய கூகையைக் காக்கை பகற்பொழுதின்கண் வெல்லாநிற்கும், இகல் வெல்லும் வேந்தர்க்குப் பொழுது வேண்டும் – அது போலப் பகைவரது இகலை வெல்லக் …

049 காலமறிதல் Read More »