122 கனவுநிலையுரைத்தல்

கனவுநிலையுரைத்தல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: கனவுநிலையுரைத்தல். குறள் 1211: காதலர் தூதொடு வந்த கனவினுக்குயாதுசெய் வேன்கொல் விருந்து. மணக்குடவர் உரை:நங்காதலர் விட்ட தூதரோடே வந்த கனவினுக்கு யான் யாது விருந்து செய்வேன்? இது தலைமகளாற்றுதற் பொருட்டுக் காதலர் வாராநின்றாரென்று தூதர் வரக் கனாக் கண்டேனென்று தோழி சொல்லியது. பரிமேலழகர் உரை:(தலைமகன் தூது வரக் கண்டாள் சொல்லியது). காதலர் தூதொடு வந்த கனவினுக்கு -யான் வருந்துகின்றது அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதினைக் கொண்டு …

122 கனவுநிலையுரைத்தல் Read More »