058 கண்ணோட்டம்

கண்ணோட்டம் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கண்ணோட்டம். குறள் 571: கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டிவ் வுலகு. மணக்குடவர் உரை:கண்ணோட்டமாகிய பெரிய அழகு அரசன்மாட்டு உண்டானபடியினாலே, இவ்வுலகநடை யாகின்றது. இஃது அஃதில்லையாயின் உலகங்கெடும் ஆதலால் கண்ணோடவேண்டுமென்றது. பரிமேலழகர் உரை:கண்ணோட்டம் என்னும் கழி பெருங்காரிகை உண்மையான் – கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற சிறப்பு உடைய அழகு அரசர்மாட்டு உண்டு ஆகலான்; இவ்வுலகு உண்டு – இவ்வுலகம் உண்டாகாநின்றது. (‘கழிபெருங்காரிகை’ என்புழி ஒருபொருட் பன்மொழி, இவ் உயிரழகது …

058 கண்ணோட்டம் Read More »