056 கொடுங்கோன்மை

கொடுங்கோன்மை பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கொடுங்கோன்மை. குறள் 551: கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டுஅல்லவை செய்தொழுகும் வேந்து. மணக்குடவர் உரை:கொலைத்தொழிலை மேற்கொண்டவரினும் கொடியன், அலைத்தற்றொழிலை மேற்கொண்டு நீதியல்லாதன செய்து ஒழுகுகின்ற அரசன். பரிமேலழகர் உரை:கொலை மேற்கொண்டாரின் கொடிது – பகைமை பற்றிக் கொல்லுதல்தொழிலைத் தம்மேற்கொண்டு ஒழுகுவாரினும் கொடியன், அலைமேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும்வேந்து – பொருள்வெஃகிக் குடிகளை அலைத்தல் தொழிலைத் தன்மேற் கொண்டு முறைஅல்லவற்றைச் செய்து ஒழுகும் வேந்தன். (அவர் செய்வது ஒருபொழுதைத் துன்பம், …

056 கொடுங்கோன்மை Read More »