028 கூடாவொழுக்கம்

கூடாவொழுக்கம் பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: கூடாவொழுக்கம். குறள் 271: வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும். மணக்குடவர் உரை:கள்ள மனத்தை யுடையானது குற்றத்தினையுடைய ஒழுக்கத்தைப் பிறரறியாராயினும், தன்னுடம்பி னுண்டான பூதங்களைந்தும் அறிந்து தம்முள்ளே நகாநிற்கும். பூதங்களைந்தும் அவையிற்றின் காரியமாகிய பொறிகளை. பரிமேலழகர் உரை:வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் – வஞ்சம் பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை; பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் – உடம்பாய் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் …

028 கூடாவொழுக்கம் Read More »