083 கூடாநட்பு

கூடாநட்பு பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: கூடாநட்பு. குறள் 821: சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடைநேரா நிரந்தவர் நட்பு. மணக்குடவர் உரை:முடியுமிடங்காணின் மற்றொருவன் எறிதற்குப் பட்டடையாம்; மனத்தினால் ஒவ்வாது புறத்து வேறுமிகச் செய்து வந்தாரது நட்பு. இது கருமங்காரணமாக நட்டாரோடு கூடும் திறங் கூறிற்று. பட்டடையாவது தான் தாங்குவது போல நின்று வெட்டுவார்க்கு உதவி செய்வது. பரிமேலழகர் உரை:நேரா நிரந்தவர் நட்பு – கூடாதிருந்தே தமக்கு வாய்க்கும் இடம் பெறுந்துணையும் கூடியொழுகுவார் நட்பு; சீர் இடம் …

083 கூடாநட்பு Read More »