128 குறிப்பறிவுறுத்தல்

குறிப்பறிவுறுத்தல் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல். குறள் 1271: கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்உரைக்கல் உறுவதொன் றுண்டு. மணக்குடவர் உரை:நீ சொல்லாது மறைத்தாயாயினும் அதற்குடம்படாதே நின்னைக் கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்லலுறுவதொரு காரியமுண்டாயிராநின்றது: இனியதனை நீயே தெளியச் சொல்வாயாக. பரிமேலழகர் உரை:(பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இது ஒன்று உடைத்து என அஞ்சியவழி, அதனை அவள் குறிப்பான் அறிந்து, அவன் அவட்குச் சொல்லியது.) கரப்பினும் – நீ …

128 குறிப்பறிவுறுத்தல் Read More »