044 குற்றங்கடிதல்

குற்றங்கடிதல் பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: குற்றங்கடிதல். குறள் 431: செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்பெருக்கம் பெருமித நீர்த்து. மணக்குடவர் உரை:பிறர்மனை நயத்தலும், வெகுளியும், சிறியார் செய்வன செய்தொழுகுதலும் இல்லாதார்க்கு ஆக்கம் தலையெடுக்கும் நீர்மையுடைத்து. பிறர்மனை விரும்புதல் செருக்கினால் வருதலின் செருக்கு என்றார். பரிமேலழகர் உரை:செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் – மதமும் வெகுளியும் காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம், பெருமித நீர்த்து – மேம்பாட்டு நீர்மையினை உடைத்து. (மதம் : …

044 குற்றங்கடிதல் Read More »