036 மெய்யுணர்தல்

மெய்யுணர்தல் பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: மெய்யுணர்தல். குறள் 351: பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்மருளானாம் மாணாப் பிறப்பு. மணக்குடவர் உரை:பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்; மாட்சிமையில்லாத பிறப்பு. இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது. பரிமேலழகர் உரை:பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம் – மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே உளதாம், மாணாப் பிறப்பு – இன்பம் இல்லாத பிறப்பு. (அவ் விபரீத உணர்வாவது, மறுபிறப்பும், …

036 மெய்யுணர்தல் Read More »