ஒளவையார் அருளிய மூதுரை

ஒளவையார் அருளிய மூதுரை கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டுதுப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்தப்பாமற் சார்வார் தமக்கு. (பதவுரை) துப்பு ஆர் – பவளம் போலும் (சிவப்பாகிய), திருமேனி – திருமேனியையும், தும்பிக்கையான் – துதிக்கையையும் உடைய விநாயகக் கடவுளின், பாதம் – திருவடிகளை, பூக்கொண்டு – (அருச்சிக்க) மலர் எடுத்துக்கொண்டு,தப்பாமல் – நாடோறும் தவறாமல், சார்வார் தமக்கு – அடைந்துபூசை செய்வோருக்கு, வாக்கு உண்டாம் – சொல்வளம் உண்டாகும்; நல்ல மனம் உண்டாம் – நல்ல சிந்தனை உண்டாகும்; மாமலராள் – பெருமை பொருந்திய செந்தாமரைப்பூவில் இருக்கும் இலக்குமியின், நோக்கு உண்டாம் – அருட்பார்வை உண்டாகும்; மேனி – அவர் உடம்பு, நுடங்காது -(பிணிகளால்) வாட்டமுறாது.விநாயகக் கடவுளின் …

ஒளவையார் அருளிய மூதுரை Read More »