112 நலம்புனைந்துரைத்தல்

நலம்புனைந்துரைத்தல் பால்: காமத்துப்பால். குறள்: களவியல். அதிகாரம்: நலம்புனைந்துரைத்தல். குறள் 1111: நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்மென்னீரள் யாம்வீழ் பவள். மணக்குடவர் உரை:அனிச்சப்பூவே! நீ நல்ல நீர்மையை யுடையாய்; எம்மால் விரும்பப்பட்டவள் நின்னினும் மிக நீர்மையாள் காண். இஃது உடம்பினது மென்மை கூறிற்று. பரிமேலழகர் உரை:(இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது.) அனிச்சமே வாழி நன்னீரை – அனிச்சப்பூவே, வாழ்வாயாக, மென்மையால் நீ எல்லாப் பூவினும் நல்ல இயற்கையையுடையை; யாம் வீழ்பவள் நின்னினும் மென்னீரள் – அங்ஙனமாயினும் எம்மால் விரும்பப்பட்டவள் …

112 நலம்புனைந்துரைத்தல் Read More »