101 நன்றியில்செல்வம்

நன்றியில்செல்வம் பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: நன்றியில்செல்வம். குறள் 1001: வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்செத்தான் செயக்கிடந்தது இல். மணக்குடவர் உரை:இடம் நிறைந்த பெரும்பொருளை ஈட்டிவைத்தானொருவன் அதனை நுகரானாயின் செத்தான்; அவன் பின்பு செய்யக்கிடந்தது யாது மில்லை. இஃது ஈட்டினானாயினும் தானொருபயன் பெறானென்றது. பரிமேலழகர் உரை:வாய்சான்ற பெரும்பொருள் வைத்தான் அஃது உண்ணான் – தன் மனை அகலமெல்லாம் நிறைதற்கு ஏதுவாய பெரும் பொருளை ஈட்டி வைத்து உலோபத்தால் அதனை உண்ணாதவன்; செத்தான் செயக்கிடந்தது இல் – …

101 நன்றியில்செல்வம் Read More »