079 நட்பு

நட்பு பால்: பொருட்பால். இயல்: நட்பியல். அதிகாரம்: நட்பு. குறள் 781: செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு. மணக்குடவர் உரை:நட்புப்போல உண்டாக்குதற்கு அரியவான பொருள்கள் யாவையுள? அவ்வாறு உண்டாக்கப்பட்ட நட்புப்போலப் பிறர் நல்வினை செய்தற்கு அரியவாகக் காக்கும் காவல்கள் யாவையுள? இது நட்புத் தேடவரிது என்றது. பரிமேலழகர் உரை:நட்பின் செயற்கு அரிய யா உள – நட்புப்போலச் செய்து கோடற்கு அரிய பொருள்கள் யாவை உள? அதுபோல் வினைக்கு அரிய காப்பு யா உள …

079 நட்பு Read More »