ஒளவையார் அருளிய நல்வழி

ஒளவையார் அருளிய நல்வழி கடவுள் வாழ்த்துபாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவைநாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்சங்கத் தமிழ்மூன்றுந் தா. (பதவுரை) கோலம் செய் – அழகினைச் செய்கின்ற, துங்கம் – உயாவாகிய, கரிமுகத்து – யானை முகத்தையுடைய, தூமணியே-பரிசுத்தமாகிய மாணிக்கம்போலும் விநாயகக் கடவுளே, பாலுந் தெளி தேனும் பாகும் பருப்பும்– ஆவின் பாலும் தெளிந்த தேனும் வெல்லப்பாகும் பருப்பும்ஆகிய, இவை நாலும் கலந்து-இந்நான்கையும் கலந்து, நான்உனக்குத் தருவேன் – அடியேன் தேவரீருக்கு நிவேதிப்பேன்;சங்கத் தமிழ் மூன்றும் – சங்கத்தில் வளர்க்கப்பட்ட முத்தமிழையும், நீ எனக்குத் தா – தேவரீர் அடியேனுக்குத் தந்தருள்வீராக.இதன் கருத்து :- விநாயகக் கடவுளே! …

ஒளவையார் அருளிய நல்வழி Read More »