034 நிலையாமை

நிலையாமை பால்: அறத்துப்பால். இயல்: துறவறவியல். அதிகாரம்: நிலையாமை. குறள் 331: நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை. மணக்குடவர் உரை:நில்லாத பொருள்களை நிலைநிற்பனவென்று நினைக்கின்ற புல்லிய வறிவுடைமை இழிந்தது. எனவே, பொருள்களை யுள்ளவாறு காணவொட்டாத மயக்கத்தைக் கடிய வேண்டுமென்றவாறாயிற்று. பரிமேலழகர் உரை:நில்லாதவற்றை நிலையின என்று உணரும் புல்லறிவு ஆண்மை -நிலையுதல் இலவாகிய பொருள்களை நிலையுதல் உடையஎன்று கருதுகின்ற புல்லிய அறிவினை உடையராதல்; கடை -துறந்தார்க்கு இழிபு. (தோற்றம் உடையவற்றைக் கேடில என்று கருதும் புல்லறிவால் …

034 நிலையாமை Read More »